பெகாசஸ்மூலம் அலைபேசி உளவு விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க முன்வராத மோடியின் ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

பெகாசஸ்மூலம் அலைபேசி உளவு விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க முன்வராத மோடியின் ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம்

புதுடில்லி,ஜூலை29-  பெகா சஸ் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று (28.7.2021) கூடி விவாதித்தனர். காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல் வேறு கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற னர். இந்தக்கூட்டத்தில் பெகா சஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு நாடாளுமன்ற சிறப்புக் குழு விசாரணைக்கு சம்மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட் டது. மேலும் நாடாளுமன்றத் தில் எதிர்க்கட்சிகள் ஒருங் கிணைந்து செயல்படுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்துக்கு வெளியே நேற்று (28.7.2021) எதிர்க்கட்சி தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பின்போது காங்கிரசு கட்சியின் மேனாள் தலைவர் ராகுல்காந்தி, மல்லி கார்ஜூன கார்கே, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் பங்கேற்றனர்.

ஜனநாயக அமைப்பிற்கு எதிராக....

அப்போது காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:

இந்தியாவின் ஜனநாயக அமைப்பிற்கு எதிராக பெகாசஸ் மென்பொருளை மோடியும் அமித்ஷாவும் ஏன் உபயோகப்படுத்தியுள்ளனர். பிரதமர் மோடி இந்திய ஜன நாயகத்தைக் காயப்படுத்தி விட்டார். இந்த நாட்டின் இளைஞர்களிடம் நான் கேட்க விரும்புவது இதைத்தான். உங்கள் அலைபேசிகளுக்கு பிரதமர் மோடி பொகசஸ் எனும் ஆயுதத்தை அனுப்பி னார். அதே ஆயுதத்தை எனக்கு எதிராகவும் அனுப்பியுள்ளார். நான் மட்டுமல்ல, உச்சநீதிமன்ற நீதிபதிகள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பட்டாளர்கள் என பலரது அலைபேசிகளுக் கும் பெகாசஸ் ஆயுதம் அனுப் பப்பட்டுள்ளது. நாடாளுமன் றத்தில் எதிர்கட்சிகளின் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நபர்களுக்கு எதி ராக பயன்படுத்த பெகாசஸ் மென்பொருளை ஒன்றிய அரசு வாங்கியதா? இல்லையா? என்ற கேள்வியைத்தான் தொடர்ந்து கேட்கிறோம். ஆம் அல்லது இல்லை என பதில் சொல்ல மறுக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் நாங்கள் இடையூறு ஏற்படுத்தவில்லை; எங்கள் கடமையை மட்டுமே செய்கிறோம். பெகாசஸ் மென் பொருள் விவகாரம் குறித்து விவாதம் நடைபெறாது என அரசு தெரிவித்துள்ளது. நாடா ளுமன்றத்தில் ஏன் விவாதம் நடத்தப்படக்கூடாது?

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment