மக்களின் அலட்சியத்தால் அதிகரிக்கும் கரோனா தொற்று சுகாதாரத் துறை செயலர் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

மக்களின் அலட்சியத்தால் அதிகரிக்கும் கரோனா தொற்று சுகாதாரத் துறை செயலர் எச்சரிக்கை

சென்னை,ஜூலை 30- மக்கள் அலட் சியமாக இருப்பதால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கிறது. இதை மக்கள் எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு, அதிக கவனத் துடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த 2 நாட் களாக கரோனா தொற்று அதி கரித்து வருகிறது.

இதேபோல, தமிழ் நாட்டில் வேறு சில மாவட்டங் களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக சுகா தாரத் துறைசெயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று (29.7.2021) கூறியிருப்ப

தாவது:

தமிழ்நாட்டில் கரோனா 2-ஆவது அலையை மக்கள் ஒத்துழைப் புடன் கட்டுப்படுத்தி இருக்கிறோம். வெளிநாடுகளிலும், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் இன் னும் முற்றிலுமாக அழிய வில்லை என்பதையே இது காட்டுகிறது.

இதை ஓர் எச்சரிக்கை மணியாக மக்கள் எடுத்துக் கொள்ள

வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், பணி யாற்றும் இடங்கள், கூட்டம் அதிகம்உள்ள இடங்கள், குடும்ப நிகழ்ச்சிகள் போன்ற இடங்களில் மக்கள் சற்று அலட்சிய மாக இருப்பதன் காரணமாக, 20 மாவட்டங்களில் சிறு சிறு பகுதிகள் அளவில் தொற்று அதிகரிக்கிறது.

சென்னை மாதவரம் பகுதியில் திடீரென தொற்று அதிகரித்தது. மாநகராட்சி நடவடிக்கையால் உடனடியாக தொற்று கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, அம்பத்தூர் மண்டலங் களில் தொற்று அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்தவும் மாநக ராட்சி நடவடிக்கை எடுத்து வரு கிறது.

கரோனா உருமாறுவதை நம் மால் தடுக்க முடியாது. ஆனால், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். தற்போது தனியார் மருத்துவ மனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப் பட் டுள்ளது. கோவை, ஈரோடு, தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலும் தொற்று அதிகரிக்க தொடங்கி யுள்ளது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

No comments:

Post a Comment