இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
சென்னை, ஆக.6 பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் வருகின்ற 12ஆம்தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-
இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிம வியல், பேரிடர் எச்சரிக்கை, பனி மற்றும் பனிப்பாறைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.-03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு வருகிற 12ஆம்தேதி (வியாழக்கிழமை) காலை 5.43 மணிக்கு வானிலை நிலைகளுக்கு உட்பட்டு ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் உள்ள 2-ஆவது ஏவதளத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது விண்ணில் செலுத்தப்படுவது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 14-ஆவது ராக்கெட்டாகும்.
No comments:
Post a Comment