பெகாசஸ் விவகாரம் : ஒட்டுக்கேட்பு குற்றம் தீவிரமானதாகும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 6, 2021

பெகாசஸ் விவகாரம் : ஒட்டுக்கேட்பு குற்றம் தீவிரமானதாகும்

உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடில்லி,ஆக.6- இஸ் ரேலின் மென் பொருள் பெகாசஸ் மூலம் பலரின் அலைபேசிகளில் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்துள்ள புகார்கள் உண்மையாக இருந்தால், அது தீவிரமான குற்றச் சாட்டு என்று உச்ச நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மனுதாரர்களான மூத்த பத்திரிகையாளர்கள் என் ராம், எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா உள் ளிட்ட மனுதாரர்கள் தங் களின் மனுக்களின் நகலை ஒன்றிய அரசு சார்பில் வழக்குரைஞருக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இஸ்ரேலின் என் எஸ்ஓ அமைப்பின் பெகா சஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், ஒன் றிய அமைச்சர்கள் உள் ளிட்ட பலரின் அலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட தாகத் தகவல் வெளியா னது. பன்னாட்டு அள வில் தி நியூயார்க் டைம்ஸ், கார் டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விவகாரத்தை கடந்த வாரத்திலிருந்து நாடாளுமன்றத்தில் எழுப்பி வரும் எதிர்க்கட் சிகள் நீதிமன்ற கண்கா ணிப்பில் சிறப்பு விசா ரணைக் குழுவுக்கு உத்தர விட வேண்டும் என வலி யுறுத்தி அமளியில் ஈடு பட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாரத் தில் எந்தவிதமான ஒட்டுக் கேட்பும் நடக்கவில்லை, யாருடைய அலைபேசியும் கண்காணிக்கப்பட வில்லை என்று ஒன்றிய அரசு மறுக்கிறது.

இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த உத்தர விட வேண்டும் எனக் கோரி மூத்த பத்திரிகை யாளர் என்.ராம், சசி குமார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் எம்.பி.ஜான் பிரிட் டாஸ், வழக்குரைஞர் எம்எல் சர்மா, பத்திரிகை யாளர் பரன்ஜாய் குஹா தாக்ருதா, எஸ்என்எம் அப்தி, பிரேம் சங்கர் ஜா, ரூபேஷ் குமார் சிங், இப்சா சடாக்ஸி ஆகியோர் தி எட்டிடர்ஸ் கில்ட் ஆப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் முன்னிலையில் நேற்று (5.8.2021) விசாரணைக்கு வந்தது. மூத்த பத்திரிகை யாளர் என்.ராம், எடிட் டர்ஸ் கில்ஆப் இந்தியா, சசிகுமார் சார்பில் மூத்த வழக்குரைஞர்கபில் சிபல் ஆஜராகினார்.

தலைமைநீதிபதி என்.வி.ரமணா கூறுகை யில்இந்த வழக்கிற்குச் செல்லும் முன், எங்களி டம் சில கேள்விகள் உள் ளன. மென்பொருள் மூலம் செல்போன் ஒட்டுக் கேட் கப்பட்டதாக எழுந் துள்ள புகார்கள், அறிக் கைகள் உண்மையாக இருந்தால், குற்றச்சாட்டு உண்மையில் தீவிரமானது தான்.

அலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக கடந்த 2019-ஆம் ஆண்டே குற்றச் சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டில் ஏதேனும் தகவல் கண்டு பிடிக்கப்பட்டதா அதற் கான முயற்சிகள் எடுக்கப் பட்டதா. எங்களுக்கு அதுபற்றி தெரி யாது.

இது வெறும் இடை யூறுதான் என்று நான் சொல்ல விரும்பவில்லை. ஒவ்வொரு வழக்கின் உண்மைக்குள்ளும் நான் செல்லவில்லை. சிலர் தங்களின் அலைபேசிகள் இடைமறிக்கப்பட்டு கேட்கப்பட்டதாக உணர்ந்தால், தொலைத் தொடர்பு சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம்எனத் தெரிவித்தார்.

அதற்கு மூத்த வழக் குரைஞர்கபில் சிபல் கூறு கையில்என்னால் விளக்க முடியும். பல விடயங்களை அணுகுவதற்கான கருவி கள் எங்களிடம் இல்லை. ஆனால் மனுதார்கள் கூறு கையில் ஏறக்குறைய அலை பேசி நேரடியாக 10 முறை இடைமறிக் கப்பட்டதாகக் கூறு கிறார்கள்எனத் தெரிவித்தார்

அதற்கு நீதிபதிகள் அமர்வு கூறுகையில்அப்படியென்றால், மனுதாரர்கள் தங்களின் மனுக்கள் நகலை ஒன்றிய அரசிடம் வழங்குங்கள். ஒன்றிய அரசு சார்பில் யாரேனும் வந்து இந்த தாக்கீதைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த வழக்கை வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கி றோம். எந்த விவகாரத்தில் நாங்கள் தாக்கீது வழங் கப்போகிறோம் என எங் களுக்குத் தெரியாது. ஒன் றிய அரசு சார்பில் முன் வந்து தாக்கீதைப் பெறட் டும் அதன்பின் பார்க்க லாம்எனத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment