உலகில் அடுத்த 10 ஆண்டுகளில் பெண் குழந்தைப் பிறப்பு 5 மில்லியன் குறையும்: ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

உலகில் அடுத்த 10 ஆண்டுகளில் பெண் குழந்தைப் பிறப்பு 5 மில்லியன் குறையும்: ஆய்வு

உலகளவில் அடுத்த 10 ஆண்டுகளில், பெண் குழந்தைகள் பிறப்புகிட்டத்தட்ட 5 மில்லியனாகக் குறையும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

பாலினத் தேர்வுகள் குறுகிய, நீண்ட காலத்தில், எந்த மாதிரியான தாக்கத்தைச் சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதை அறிய, அனைத்துலக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் பிறந்த மூன்று பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

ஆண் குழந்தைகள் மட்டுமே வேண்டும் என்று கலாச்சார ரீதியாக விருப்பம் கொண்ட நாடுகளில், பாலினம் பார்த்துத் குழந்தையை முடிவு செய்யும் போக்கு இன்னமும் நிலவுகிறது. அது வருங்காலத்தில் சமூக ஒற்றுமையைக் குலைக்கும் என்று ஆய்வு கூறியது.

மேலும் இத்தகைய போக்கால், 2030ஆம் ஆண்டு, உலகின் மூன்றில் ஒரு பங்கினரில், இளம் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வறிக்கை சுட்டியது.

இது சமூக விரோத, வன்முறை நடவடிக்கைகளுக்கு இட்டுச்செல்லும் வாய்ப்பை அதிகரிக்கும். தென் கிழக்கு அய்ரோப்பா, தெற்காசிய, கிழக்காசிய நாடுகளில், கடந்த 40 ஆண்டுகளில், குழந்தைகளின் பாலினத்தை அறிந்து கருக்கலைப்பு செய்யும் நடைமுறை அதிகரித்துள்ளது. பாலின பேதத்தை ஒழித்து சமத்துவத்தை உறுதிப்படுத்த சட்டக் கட்டமைப்புத் திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என அய்க்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment