இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் 12 மணிக்கு வெளியாகும் என்று சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளது.
இதில் 20,97,128 பேர் தேர்வை எழுதப் பதிவு செய்திருந்த நிலையில், 20,76,997 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்ச்சி விகிதம் 99.4% ஆக உள்ளது. 98.89% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 16,639 பேரின் தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தேர்வு
முடிவுகளை மாணவர்கள் தங்கள் cbseresults.nic.in , cbse.gov.in இல் காணலாம். அல்லது Digilocker, Umang
ஹினீணீஸீரீ செயலி
மற்றும் எஸ்எம்எஸ் மூலமும் தெரிந்து கொள்ளலாம்
என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள்,
பள்ளிகளில் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி
எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, ஆக.4 தமிழ்நாட்டில் 12.5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது என்றும் தட்டுப்பாடு இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி யுள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி போட்டு கொள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் நேற்று கூறும் போது, தமிழகத்தில் கரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
கேரளா, கருநாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப மாநில எல்லை பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் தற்போது கையிருப்பில் 12.5 லட்சம் தடுப் பூசிகள் கையிருப்பில் உள்ளது. அதனால், தற்போது தடுப் பூசி தட்டுப்பாடு இல்லை என்று கூறியுள்ளார். உருமாறிய கரோனோ வைரஸ் குறித்து கண்டறிய தமிழ்நாட்டில் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 32 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பும், 10 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களது உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலவச இருசக்கர (மோட்டார்) வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் உறுதி
சென்னை, ஆக. 4- அ.தி.மு.க. ஆட்சி யின் திட்டம் என்ற காழ்ப்புணர்ச்சி கிடையாது, இலவச இருசக்கர (மோட் டார்) வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உறுதி.
சென்னை தலைமைச்செயலகத் தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அளித்த பேட்டி வருமாறு:-
நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றுவோருக்கான ஊதியத்துடன் கூடுதலாக ரூ.300 கொடுப்பதாக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப் படும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார்.
மாநகராட்சிகளுக்கு அருகே உள்ள சில ஊராட்சிகள், அந்தந்த மாநகராட்சியுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. அதுகுறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜல் ஜீவன் திட்டத்தின் பல பணிகள் தரமாக இல்லை என புகார்கள் வந்துள்ளன. திட்டப்பணிகளில் காலதாமதம் ஏற்பட்டால் டெண்டர் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்ற காரணத்தினால் காழ்ப்புணர்ச்சி கொண்டு அவற்றை கிடப்பில் போடப்போவதில்லை. மகளிருக்கான இலவச இருசக்கர (மோட்டார்) வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். நிதி நிலைமையை பொறுத்து, அந்த திட்டத்தை விரிவுப்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



No comments:
Post a Comment