அபுதாபி, ஆக.7 இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து அபுதாபிக்கு 10ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை தொடங்க இருப்பதாக எதிகாத் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
அபுதாபியில் எதிகாத் தேசிய விமான நிறுவனம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-
அமீரகத்தின் சார்பில் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 6.8.2021 முதல் இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து குடியிருப்பு விசா பெற்ற பயணிகள் வருகை புரிய அனுமதி வழங்கப்பட்டது.
இதில் 5.8.2021 முதல் துபாய்க்கு விமானங்கள் மூலம் பயணிகள் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகை புரிய தொடங்கியுள்ளனர்.
எனினும் அபுதாபிக்கு வருகை புரிய இன்னும் விமான கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட
வில்லை.
இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து அபுதாபிக்கு விமானப் போக்கு வரத்து சேவை வருகிற 10ஆம் தேதி முதல் தொடங்கும்.
இதேபோல வங்காளதேசத்தில் இருந்து வருகை புரியும் பயணிகள் அபுதாபி வழியே பிற இடங்களுக்கு இணைப்பு விமானங்களில் பயணம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment