அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கை

வாசிங்டன்,ஆக.7- அமெ ரிக்காவில் சட்டபூர்வமாக குடியேறியவர் களின் குழந்தை களுக்கு குடியுரிமை வழங்கு வதற்கான நடவடிக் கையை அதிபர் ஜோ பைடன் நிர் வாகம் எடுக்கிறது.

உலகமெங்கும் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்களையும், பிற தொழில் துறை நிபுணர்களை யும் அமெரிக்க நிறுவனங்கள் பணியமர்த்தஎச்-1பிவிசாவை அந்த நாடு வழங்குகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 85 ஆயிரம் பேர் இந்த விசா வைப் பயன்படுத்தி அமெரிக் காவில் குடியேறுகின்றனர்.

குழந்தைகளுக்கு சிக்கல்

அவர்களுடன் அவர்களது குழந்தைகளும் அமெரிக்காவில் வாழ்கின்றனர். இதில்தான் அங்கே ஒரு சட்ட சிக்கல் இருக்கிறது. இப்படி தாய் அல்லது தந்தையுடன் வசிக்கிற குழந்தைகள், 21 வயதாகிற போது பெற்றோரை சார்ந்து இருக்க முடியாது.

ஏனெனில் அமெரிக்க சட்டம் அப்படித்தான் கூறு கிறது.இதனால் அங்கு இப்படி இருக்கிற ஏறத்தாழ 2 லட்சம் குழந்தைகள், தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்ற நிலையில் அச்சத்தில் உள்ளனர். ஆனால் இவர்களது பெற்றோர், நிரந்தரமாக அங்கு வசிப்பதற்கான கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருக்கின் றனர்.

அமெரிக்காவில் வசிக்கிற அயல்நாட்டு குழந்தைகளுக் காகஇம்ப்ரூவ் தி டிரீம்என்ற அமைப்பு அங்கு செயல்படு கிறது.

குடியுரிமை வழங்க நடவடிக்கை

இப்படி அங்கு சட்டபூர்வ மாக குடியேறிய வெளிநாட்டி னரின் குழந்தைகளுக்கு குடியு ரிமை வழங்குவதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் எடுப்பது தெரிய வந்துள்ளது. வாசிங்டன் வெள்ளை மாளிகையில் அதன் ஊடகச் செயலாளர் ஜென் சாகி 4.8.2021 அன்று செய்தி யாளர் களை சந்தித்தார். அப்போது அவரிடம், பெற் றோருடன் அமெரிக் காவில் வசிக்கும் வெளிநாட்டு குழந்தைகளுக்கு, அவர்கள் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

தங்கள் பெற்றோருடன் அமெரிக்காவில் வசிக்கிற குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கிறோம்.

அமெரிக்க குடியேற்ற முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்ப தில் அதிபர் தெளிவாக கூறி உள்ளார்.

இதில் விசா செயல்முறை முன்னேற்றங்களும் அடங்கும். நாடாளுமன்றத்துக்கு அனுப் பிய குடியேற்ற மசோதாவில் அதிபர் தெளிவாக இருக்கிறார். இது குடும்ப குடியேற்ற அமைப்பை சீர்திருத்துகிறது. பின்னடைவை நீக்குகிறது. பயன்படாத விசாக்களை திரும்ப மீட்கிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் விசா உச்ச வரம்புகளை அதிகரிக்கிறது. இந்த மசோதா, ‘எச்-1பிவிசா வைத்திருப்பவர்களுக்கு வேலை அங்கீகாரம் தருகிறது. அவர்களது குழந்தைகள் அமெரிக்க அமைப்பில் இருந்து வெளியேற்றுவதை தடுக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment