இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி தயாரிக்க குவாட் நாடுகள் முடிவு - அமெரிக்கா தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி தயாரிக்க குவாட் நாடுகள் முடிவு - அமெரிக்கா தகவல்

வாசிங்டன், ஆக.7 இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி தயாரிக்க குவாட் நாடுகள் நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கி உள்ளன.

கடந்த மார்ச் மாதம் நடந்த இந்த அமைப்பின் முதல் கூட்டத்தில், இந்தியா வில் 100 கோடி தடுப்பூசி டோஸ் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையை தீவிரப் படுத்தி இருப்பதாக அமெ ரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில்,

எங்கள் குவாட் கூட்ட மைப்பானது, 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் தென் கிழக்கு ஆசிய பிராந்தி யத்துக்காக இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி களை உற்பத்தி செய்ய நட வடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

அமெரிக்கா இதுவரை உலக நாடுகளுக்கு 11 கோடி தடுப்பூசிகள் வழங்கியிருப்ப தாக கூறிய ஜென் சாகி, இது உலகின் மற்றெந்த நாடுகளை விடவும் அதிகமானது என வும் தெரிவித்தார்.

தாங்கள் கொள்முதல் செய்துள்ள 50 கோடி பைசர் தடுப்பூசிகளை உலக நாடு களுக்கு நன்கொடையாக வழங்க இருப்பதாகவும், இந்த மாத இறுதியில் இருந்து இந்த நடவடிக்கை தொடங்கும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment