சீனாவுக்கு டெல்டா வைரஸ் சவாலாக மாறியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

சீனாவுக்கு டெல்டா வைரஸ் சவாலாக மாறியது

 வாசிங்டன், ஆக.7 சீனாவுக்கு டெல்டா வைரஸ் சவாலாக மாறி இருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ், டெல்டா வைரஸ் ஆகும்.இது மிகவேகமாக பரவுகிறது. உலகின் 135 நாடுகளுக்கு பரவி உள் ளது. உலகுக்கு கரோனா வைரசை வழங்கிய சீனாவுக்கு இப்போது இந்த டெல்டா வைரஸ் சவாலாகவும், தலைவலியாகவும் மாறி உள்ளது.

இந்த வைரஸ் பரவல், சீனாவை மட்டுமல்ல, அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் அவற்றின் தலைவர்கள் புதிய கட்டுப் பாடுகளை விதிக்க வைத்துள்ளது.சீனா, இந்த டெல்டா வைரஸ் பரவ லில் இருந்து காத்துக்கொள்வதற்கு அங்குள்ள அதிபர் ஜின்பிங் நிர்வாகம் போராடி வருகிறது. அங்கு ஊரடங்கு போடும் நடவடிக்கை களை ஆளும் கம்யூனிஸ்டு கட்சி புதுப்பிக்கிறது.

15 லட்சம் மக்களைக் கொண் டுள்ள நகரத்துக்கு செல்வது துண்டிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. சில பகுதிகளில் மக்கள் பெருந்திரளாக பரிசோதனை செய்வ தற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபற்றி உகான் நகரில் கரோனா உருவானபோது பிரபல மான ஷாங்காய் நகர டாக்டர் ஜாங் வென்ஹாங் சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறி இருப்பதாவது:-

சமீபத்திய வைரஸ் பரவல்கள், வைரஸ் இன்னும் போய் விடவில்லை என்று காட்டுவதால் சீனாவின் உத்திகள் மாறலாம்.

இந்த வைரசுடன் இருப்பதற்கு உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.as

No comments:

Post a Comment