தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதிநிலை கூட்டத்தொடர் அலுவல் ஆய்வுக்குழு 10ஆம் தேதி கூடி முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 8, 2021

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதிநிலை கூட்டத்தொடர் அலுவல் ஆய்வுக்குழு 10ஆம் தேதி கூடி முடிவு

சென்னை, ஆக.8 தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதிநிதி  கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு 10ஆம் தேதி கூடி முடிவு செய்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதிநிலை கூட்டத்தொடர் 13ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டமன்ற அரங்கத்தில் அன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

பொதுவாக, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அலுவல் ஆய்வுக்குழு கூடி, சட்டமன்றத்தை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும், என்னென்ன அலுவல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யும். ஆனால் இந்த முறை சட்டமன்றம் தொடங்குவதற்கு முன்பே அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்படுகிறது. அதன்படி, 10ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவைத் தலைவர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் .தி.மு.., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி சட்டமன்ற உறுப் பினர்கள் பங்கேற்பார்கள். சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை இந்த கூட்டத்துக்கு பிறகு பேரவைத் தலைவர்அப்பாவு அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.

No comments:

Post a Comment