சென்னை, ஆக.9- கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சி யின் நிதி நிர்வாகம் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று (9.8.2021) காலை 11.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை அரங்கில் செய்தியாளர்க ளிடையே வெளியிட்டார்.
முந்தைய அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் திட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகைகள் எந்தெந்த வழிகளில் அவை செலவிடப்பட்டன என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட 120 பக்க வெள்ளை அறிக் கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
இதில், அதிமுக ஆட்சியில் பெறப் பட்ட தொழில் முதலீடுகள் மற்றும் பல் வேறு துறைகளின்கீழ் செலவிடப்பட்ட நிதி கணக்குகள்குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தார். தற்பொழுது திமுக ஆட்சி அமைந்த உடன், அதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு, முதலமைச்சரின் வழி காட்டுதலின்பெயரில் அரசின் அதிகாரப் பூர்வமான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய விவரங்கள் இருக் கின்றன என செய்தியாளர்களிடையே நிதியமைச்சர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment