தந்தை பெரியாரின் தனிச் செயலாளராக - எவ்வித ஊதியமும் பெறா மலேயே 1958 முதல் தொடங்கி இறுதி மூச்சடங் கும்வரை தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா.மணி யம்மையார் ஆகியோருக் குப் பணி - தொண்டு முடிந்த நிலையிலும், உற்ற தோழன் என்பதைத் தாண்டி, கழகத்தின் முக்கியப் பொறுப்பை நான் ஏற்ற நிலையில், எனக்கும் கூட்டுப் பணித் தோழராக இருந்து, நாகம்மையார் குழந்தைகள், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு தாளாளர் பணி; ‘உண்மை' இதழுக்கு ஆசிரியர் பொறுப்பு - இப்படி இயக்கத்திற்கே உழைத்த எமது உயிர்த் தோழர் புலவர் கோ.இமயவரம்பன் 27 ஆம் ஆண்டு நினைவு நாள்!
குழந்தை உள்ளமும், கொண்ட கொள்கையில் முரட்டுப் பிடிவாதமும் கொண்டு உழைத்த அவர், தன் வீட்டு வசதிகளையே இயக்கத் தொண்டிற்குப் பயன்படுத்திய தொண்டறத்தால் திளைத்தவர். ஆய்வு நூல்களின் ஆக்கம் அவர்!
அவர் மறைவு என்பதைவிட, கொள்கையாலும், தொண்டாலும் எப்போதும் நம்முடன் நிறைவுடன் நிற்பவர் என்பதே மறுக்க முடியாத உண்மை.
அத்தகைய தன்னலமற்றோர்களின் தகைசான்ற உழைப்பாலே நாளும் வளர்கிறது நமது இயக்கம்!
நீங்கா நினைவுகளுடன் நம் பயணம் தொடரு கின்றது; களங்கள் கடமை வீரர்களால் சூழப்பட்டு, கருப்பு மெழுகுவத்திகளின் ஓய்வறியா வெளிச்சம் தெரிந்து வீறுநடை போடுகிறது!
வாழ்க பெரியார்!
வாழ்க புலவர் இமயவரம்பன்!!
தலைவர்
திராவிடர் கழகம்.
சென்னை
9.8.2021

No comments:
Post a Comment