12 - 18 வயதினருக்கு அக்டோபரில் தடுப்பூசி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

12 - 18 வயதினருக்கு அக்டோபரில் தடுப்பூசி

புதுடில்லி, ஆக. 7 ''நாடு முழுதும் 12 - 18 வயது வரையிலான சிறுவர் - சிறுமியருக்கு 'கோவோவாக்ஸ்' தடுப்பூசி, அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும்,'' என, சீரம் இந்தியா நிறுவன தலைவர் அடார் பூனாவாலா உறுதி அளித்தார்.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கோவாக்சின்' மற்றும் சைடஸ் கடிலா நிறுவனத்தின் 'சைகோவ் - டி' ஆகிய குழந் தைகளுக்கான கரோனா தடுப்பூசிகளின் பரிசோதனை ஏற்கெ னவே துவங்கப்பட்டுள்ளன.'கோவிஷீல்டு' தடுப்பூசியை தயாரித்து வரும் சீரம் இந்தியா நிறுவனம் 'கோவோவாக்ஸ்' என்ற குழந்தைகளுக்கான தடுப்பூசியை தயாரித் துள்ளது. இதை, 12 - 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்தி, இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள சீரம் இந்தியா நிறுவனத்துக்கு ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த மாதம் அனுமதி அளித்தது. இந்நிலையில் சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று (6.8.2021) சந்தித்து பேசினார்.

No comments:

Post a Comment