சென்னை,ஆக.6- தமிழ்நாட்டில் இந்த ஆண்டு காகிதமில்லா வடிவில் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப் படுகிறது. இதற்காக பேரவை அரங்கில், ஒவ்வொரு உறுப்பினர் மேஜையிலும் கணினிபொருத்தும் பணிகள் முடிக்கப்பட் டுள்ளன.
காகிதத்துக்காக ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இயற் கையை பாதுகாக்கவும், செலவு களைக் குறைக்கவும் தற்போது காகிதமில்லா நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசிலும் மின்னாளுமை முகமை மூலம் பல்வேறு மென் பொருட்கள் தயாரிக்கப்பட்டு துறை களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
காகிதமில்லா சட்டப்பேரவை
கடந்த 2018ஆம் ஆண்டிலேயே ‘காகிதமில்லா சட்டப்பேரவை’ என்றதிட்டம் தொடங்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு கொள்கை விளக்க குறிப்புகள், அறிக்கைகள், கேள்வி - பதில்கள் உள்ளிட்ட விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டன. அதேபோல் பல்வேறு நிறுவனங்களின் ஆண்ட றிக்கைகளும் கணினி வாயிலாக அனுப்பப்பட்டன.
தமிழ்நாட்டில் இதுவரை காகித வடிவில்தான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப் பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட காகித வடிவிலேயே இருந்தது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், இந்த ஆண்டு 'இ- பட்ஜெட்' தாக்கல் செய்யப்படும் என்று நிதிய மைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
இதன்மூலம் ரூ.1 கோடி வரை மிச்சமாகும் என்பதுடன், பல ஆயிரக்கணக்கான மரங்களும் பாது காக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 2021- - 2022 நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் முழுமையான நிதிநிலை அறிக்கை, வரும் 13ஆம் தேதிதாக்கல் செய்யப் பட உள்ளது. முதல்முறையாக, இந்த ஆண்டு காகிதமில்லா 'இ-பட்ஜெட்' தாக்கல் செய்யப்படுகிறது.
இதற் கான முன்னேற்பாடுகளை சட்டப் பேரவைச் செயலகம் செய்து வருகிறது.
அதன்படி, கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடக்க உள்ள அரங்குக்குள் உறுப் பினர்கள் ஒவ்வொருவரின் இருக்கை முன்பும்மேஜையில் சிபியுவை உள்ளடக்கிய 'ஆல்-இன்-ஒன் கணினி' பொருத்தப்பட்டுள்ளது. உறுப்பி னர்கள் மட்டுமின்றி பேரவைத் தலைவர், அதிகாரிகள் இருக்கைகள் என அனைத்திலும் இந்த கணினி பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரவைச் செயலக அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டிலேயே முதன்முதலில் இமாச்சல பிரதேச அரசு, சில ஆண்டுகளுக்கு முன்பே மின்னணு பட்ஜெட்(இ- பட்ஜெட்) தாக்கல் செய்துவிட்டது. ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களும் தற்போது முழுமையாக மின்னணு முறைக்கு மாறிவிட்டன. தமிழ்நாட்டில் காகிதமில்லா சட்டப்பேரவை செயல்பாடுகள் 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டாலும், இந்த முறைதான் மின்னணு முறை யில் நிதிநிலை அறிக்கை தாக்க லாகிறது.
காகித வடிவிலும்
ஆக.13ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் வாசிக்கும்போது, அவர் வாசிக்கும் வரிகள், அப்படியே திரையில் தெரியும்.
அதேநேரம், உறுப்பினர்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் ‘டேப்’ கணினியில், முழு பட்ஜெட்டும் ‘பிடிஎஃப்’ வடிவில் பதிவிடப் பட்டிருக்கும். அதையும் அவர்கள் பார்த்துக் கொள்ளலாம். மேலும், பேரவை அரங்கின் உள்ளேயும், வெளியிலும் பெரிய திரைகளில் நிதிநிலை அறிக்கை வெளியாகும். காகித வடிவிலும் குறைந்த அளவில் நிதிநிலை அறிக்கை அச்சடிக்கப்படும். பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் கேட்கும் உறுப்பினர்களுக்கு அவை வழங்கப்படும்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி
இது முதல் முயற்சிதான். இந்த முயற்சி அடுத்தடுத்த நிலைகளிலும் தொடரும். இதற்காக 380 கணினிகள், ‘டேப்’கள் வாங்கப்பட்டுள்ளன.
ஆக.14ஆம் தேதி தாக்கலாகும் வேளாண் நிதிநிலை அறிக்கையும் இதே முறையில் தாக்கல் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. கணினிமற்றும் டேப் பயன் படுத்துவது தொடர்பாக உறுப்பினர் களுக்கு சில தினங்களில் சட்டமன்ற விடுதியில் பயிற்சி அளிக்கப்படும். அனைத்து உறுப்பினர்களும் முழு மையாக தொழில்நுட்பத்தை பயன் படுத்தும் வரை காகித வடிவிலான நிதிநிலை அறிக்கை அச்சடிப்பதும் தொடரும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment