சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
கிருஷ்ணகிரி, ஆக.6 ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் 25 ஆயிரம் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப் பள்ளியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை நேற்று (5.8.2021) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வினை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
ஆரம்பச் சுகாதார நிலையங்கள், துணைச் சுகாதார நிலையங்களில் இருக்கும் செவிலியர்கள் மற்றும் துணைச் செவிலியர்கள் உட்பட அனைவருக்கும் ஏற்கெனவே, வெளி முகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 15 நாட்களாக பணி செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் தன்னார்வலர்களையும் பயன்படுத்தப் போகிறோம்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத் தைப் பொறுத்தவரை, ஏறத்தாழ மருத்துவம் சார்ந்த 25 ஆயிரம் களப் பணியாளர்களை இந்த ஆண்டு இறுதிக் குள் பணியமர்த்த முதலமைச்சர் உத்தர விட்டிருக்கிறார்.
புதிய பணியிடங்கள், ஏற்கெனவே இருக்கும் பணியாளர்கள் என மொத்தம் 25 ஆயிரம் பேர் இக்களப்பணியில் ஈடு பட உள்ளனர்.
ஊட்டச்சத்துப் பரிசுப் பெட்ட கத்தைப் பொறுத்தவரை கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகக் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், கடந்த ஆட்சிக் காலத்தில் அதில் சுணக்கம் ஏற்பட்டது உண்மை.
தமிழ்நாடு முதலமைச்சர் இந்தத் துறையை ஆய்வு செய்தபோது, ஏற் கெனவே செயல்படுத்தப்பட்டுக் கொண் டிருக்கும் திட்டமாக இருந் தாலும் அதைத் தொடர்ந்திட வேண்டு மென்று இந்தத் துறைக்குக் கட்டளையிட்டிருக் கிறார். அதன்படி கடந்த 10 நாட்களாக எல்லா மருத்துவமனை களிலும் ஊட்டச் சத்துப் பெட்டகம் தருகின்ற பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment