பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக ராகுல் சைக்கிள் பேரணி
புதுடில்லி, ஆக. 4- பெகாசஸ் உள் ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ராகுல் தலைமையில் 15 எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று (3.8.2021) அவசர ஆலோசனை யில் ஈடுபட்டனர். அப்போது, பிரதமர் மோடிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டுமென ராகுல் அழைப்பு விடுத்தார். கூட்டம் முடிந்த பின், பெட் ரோல் விலை உயர்வை கண் டித்து ராகுல் உள்ளிட்ட நாடா ளுமன்ற உறுப்பினர்கள் சைக்கி ளில் நாடாளுமன்றத்திற்கு பேர ணியாக சென்றனர்.
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந் தியாவில் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க் கட்சி தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களின் அலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக பன் னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஓரணியில் திரண்டனர்
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியு றுத்தி வருகின்றன. விவாதம் நடத்த ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. இதனால், மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே அமளி காரணமாக நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. இந்த விவ காரத்தில் ஒன்றிய அரசுக்கு எதி ராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. கடந்த 27ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 14 எதிர்க் கட்சிகளை சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆலோ சனைக் கூட்டம் நடத்தினர். இதில், பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து, நல்ல ஒத்துழைப்புடன் ஒன்றிய பாஜ அரசுக்கு அழுத்தம் கொடுப்பது என தீர்மானிக்கப் பட்டது. பெகாசஸ் குறித்து விவாதம் நடத்த கோரி தினமும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடு பட்டும் ஒன்றிய அரசு முறையாக பதிலளிக்காததால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க 17 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.
100 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அதன்படி, நாடாளுமன்றம் நேற்று தொடங்குவதற்கு முன் பாக, ராகுல் காந்தி 15 கட்சிகளை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் களுடன் ஆலோசனை நடத் தினார். இந்தக் கூட்டத்தில் காங் கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா, திமுக, இந்திய கம்யூ னிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், ராஷ்டிரிய ஜனதாதளம், சமாஜ்வாடி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, லோக்தந் திரிக் ஜனதா தளம், கேரள காங்கிரஸ் (எம்) ஆகிய 15 எதிர்க்கட்சி தலைவர்கள் மற் றும் காங்கிரஸ் மூத்த தலை வர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சி. வேணுகோபால், ஆனந்த் சர்மா, ப.சிதம்பரம் உட்பட சுமார் 100 காங்கிரஸ் எம்.பிக்கள் கலந்து கொண்டனர். ஆம் ஆத்மி மற் றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட் சிகளுக்கு அழைப்பு விடுத்தும் கலந்து கொள்ளவில்லை.
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘நாம் அனை வரும் ஒன்றிணைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகதான் அழைப்பு விடுத்தேன். இந்த குரல் எவ்வளவு அதிகமாக ஒன்றிணைகிறதோ, அவ்வளவு சக்திவாய்ந்ததாக மாறும்.
பா.ஜ.க. ஆர்.எஸ்எஸ்க்கு மிகவும் கடினமாக இருக்கும்
இந்த குரலை ஒடுக்குவது பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு மிகவும் கடினமாக இருக்கும். ஒற்றுமையின் அடித்தளத்தை நாம் நினைவில் கொள்ள வேண் டும். இப்போது நாம் ஒருங் கிணைப்புக்கான கொள்கை களைக் கொண்டு வரத் தொடங்குவது முக்கியம். நாம் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றார். மேலும், இந்த கூட்டத்தில், நாட்டில் நிலவும் பல்வேறு முக்கிய பிரச் சினைகள் குறித்து நாடாளு மன்றத்தில் செயல்படுவது குறித் தும், பிரதமர் மோடிக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு ராகுல் காந்தி தலைமையில் 15 எதிர்க் கட்சிகளின் எம்பிக்கள் பெட் ரோல் விலை உயர்வைக் கண் டித்து சைக்கிளில் பேரணியாக நாடாளுமன்றத்திற்கு சென்ற னர். அப்போது, ராகுல் காந்தி கூறுகையில், ‘எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக இந் திய மக்கள் போராடுகிறார்கள். நாங்கள் இங்கிருந்து நாடாளு மன்றத்திற்கு சைக்கிளில் சென்றால், அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்றார். பின்னர், அனைவரும் கூட்டத்தொடரில் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment