புதுடில்லி,ஆக.5- இந்தியாவில் 3.8.2021 அன்று 30 ஆயிரத்து 549 பேருக்கு மட்டுமே கரோனாதொற்று ஏற்பட்டது. நேற்று (4.8.2021) இந்த எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 42,625 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதியானது. மொத்த பாதிப்பும் 3 கோடியே 17 லட்சத்து 69 ஆயிரத்து 132 ஆக உயர்ந்தது.
நேற்றுமுன்தினம் (3.8.2021) 18 லட்சத்து 47 ஆயிரத்து 518 மாதிரிகள் பரிசோதிக் கப்பட்டன. 2-ஆம் தேதியுடன் ஒப்பிடுகை யில் (16 லட்சத்து 49 ஆயிரத்து 295 மாதிரிகள்), இது கிட்டத்தட்ட 2 லட்சம் அதிகம் ஆகும்.
தினசரி பாதிப்பு விகிதம் 2.31 சதவீதம் ஆகும். வாராந்திர பாதிப்பு விகிதம் 2.36 சதவீதம். 2-ஆம் தேதியும், 3-ஆம் தேதியும் தொடர்ந்து தினமும் 422 பேர் கரோனா வால் பலியானார்கள். நேற்று (4.8.2021) இந்த எண்ணிக்கை 562 ஆக அதிகரித்தது. இதுவரை கரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்து 757 ஆக உயர்ந்தது. வழக்கம்போல மராட்டியத்தில் அதிகபட்சமாக 177 பேரும், கேரளாவில் 148 பேரும் இறந் திருக்கிறார்கள். கரோனாஇறப்பு விகிதம் 1.34 சதவீதமாக தொடருகிறது.
கரோனாவில் இருந்து மீள்வதற்கு எடுத்த சிகிச்சை பலன் அளித்ததால் நேற்று ஒரு நாளில் 36 ஆயிரத்து 668 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினார்கள்.
இதுவரை நாட்டில் 3 கோடியே 9 லட்சத்து 33 ஆயிரத்து 22 பேர் கரோனாவில் இருந்து வெற்றிகரமாக மீண்டிருக்கிறார்கள். மீட்பு விகிதம் 97.37 சதவீதம் ஆகும். இந்த புள்ளி விவரங்களை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.
No comments:
Post a Comment