சென்னை, ஆக.5 மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில், 7 பேருக்கு இரட்டை தூக்கு தண் டனை, 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில், பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட் டப்பட்டார். தலை, கழுத்து, கை என்று
20-க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங் களுடன் மருத்துவமனையில் அனும திக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பல னின்றி மரணமடைந்தார்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக, சுப்பையாவின் மைத் துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகா ரில் வழக்குப் பதிவு செய்த அபிராம புரம் காவல்துறையினரால், அரசுப் பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்குரைஞர் பாசில், வில்லியம், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், கூலிப் படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், அய்யப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 6 ஆண்டுகளாக
வழக்கு நடைபெற்ற காலத்தில் அய்யப்பன் அரசு தரப்பு சாட்சி ஆகிவிட்டார். கடந்த 6 ஆண்டு களாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, கரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக நாள்தோறும் நடைபெற்றது.
அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞர் என்.விஜயராஜ் ஆஜ ரானார். குற்றம் சாட்டப்பட்டவர் கள் தரப்பில் ஆதரவாக மூத்த வழக் குரைஞர்கள் கோபாலகிருஷ்ண லக்ஷ்மணராஜு, ரகுநாதன், சந்திர சேகர் உள்ளிட்டோர் ஆஜரானார் கள். அரசுத் தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 173 ஆவ ணங்கள், 42 சான்றுப் பொருட்கள் குறியீடு செய்யப்பட்டன. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட் டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப் பட்டன.
கூடுதல் அமர்வு நீதிமன்றம்
சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பை ஜூலை 28ஆம் தேதி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளிவைத்து, ஆகஸ்ட் 2ஆம் தேதி அறிவிப்பதாகத் தெரிவித்தார்.
அன்றைய தினம் குற்றம் சாட் டப்பட்ட மேரிபுஷ்பம், பொன்னு சாமி ஆகியோர் உடல்நிலை சரியில்லாததால் நீதிமன்றத்தில் ஆஜ ராகவில்லை என, அவரின் வழக் குரைஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, வழக்கின் தீர்ப்பு வரும் 4ஆம் தேதி அறிவிக்கப்படும் என, நீதிபதி அல்லி தெரிவித்து வழக்கைத் தள்ளிவைத்தார். அதன் படி, சுப்பையா கொலை வழக்கில் நேற்று (04.08.2021) தீர்ப்பு வழங்கிய முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, குற்றம் சாட்டப்பட்ட அனை வரும் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள் நிரூபணம்
அரசுத் தரப்பில் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட் டுள்ளதாக நீதிபதி தெரிவித் துள்ளார். இதையடுத்து, அரசு சிறப்பு வழக்குரை ஞர் விஜயராஜ், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று வாதாடினார்.
இதையடுத்து, தண்டனை விவ ரத்தை அறிவித்த நீதிபதி, பொன்னு சாமி, பாசில், போரிஸ், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல் வபிரகாஷ் ஆகியோருக்கு இரட்டை தூக்கு தண்டனை மற்றும் தலா ரூபாய் 50,000 அபராதம் விதித்தார்.
மேரி புஸ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.50,000 அபராதம் விதித்தார். அய்யப்பன் அரசு தரப்பு சாட்சி ஆகிவிட்டதால் அவர் அரசு சாட்சி. ஆகவே, அவருக்குத் தண்டனை எதுவும் கிடையாது.

No comments:
Post a Comment