காங்கயம்,ஆக.8- காங்கயம் அருகே, சிவன் மலையில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில் செல்லாத 500 ரூபாய் நோட்டு, பச்சை வேட்டி-துண்டு, வெள்ளைச் சட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற் பட்ட பொருள்கள் வைத்து, சாமி வழிபாடு நடத்தப் பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன் மலையில் சுப்பிரமணிய சாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத ஓர் அம்சமாக, சிவன் மலை முருகன் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து வழிபாடு செய்யப் படுவது வழக்கம். பின்னர் அந்தப் பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக, கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் வைத்து, மக்களின் பார் வைக்கு வைப்பார்கள்.
இப்படி, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப் படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்று எதுவும் இல்லாமல், இன்னொரு பக்தரின் கனவில் வந்து, அடுத்த பொருளை சுட்டிக் காட்டும் வரையில், பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்குமாம். இவ்வாறு, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப் படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப்பகுதி களில் உள்ளவர்களின் நம்பிக்கை. இந்தப் பொருள் தேசிய அளவில் ஏற்றமும் பெறலாம், இறங்குமுகமும் பெற லாம் என்பதற்கான குறியீடாக, இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட் டிருக்கும் பொருளை இப் பகுதி மக்கள் கவனித்து வருகின்றனர். கடைசி யாக கடந்த மே மாதம்
18 ஆம் தேதி முதல் வேப் பிலை, துளசி உள்ளிட்ட பொருள்கள் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட் டிருந்தது.
இந்நிலையில், திருப் பூர் மாவட்டம், முத்தூர் அருகே வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எஸ்.கோ குல்ராஜா என்ப வர் பச்சை நிற வேட்டி-துண்டு, மதிப்பிழந்த 500 ரூபாய் நோட்டுக்கள் இரண்டு, ரூ.5, ரூ.2, ரூ.1 ஆகிய ரூபாய் நோட் டுக்கள் என மொத்தம்
ரூ. 1,008 மதிப்பில் பணம், வெள் ளைச் சட்டை, 2 ராசிக் கட்டங்கள், தேங் காய், எலுமிச்சை, வெற் றிலை-பாக்கு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பொருள்கள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர், கண்ணாடிப் பெட் டிக்குள் வைக்கப்பட்டி ருந்த வேப்பிலை, துளசி நீக்கப்பட்டு, மதிப் பிழந்த 500 ரூபாய் நோட்டு, வேட்டி -சட்டை உள் ளிட்ட பொருள்கள் தற் போது மக்களின் காட்சிக் காக வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment