இந்தியாவில் கரோனா பாதிப்பு ஏறுமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 8, 2021

இந்தியாவில் கரோனா பாதிப்பு ஏறுமுகம்

புதுடில்லி, ஆக.8 இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்கிறது. 6.8.2021 அன்று ஒரே நாளில் 44 ஆயிரத்து 643 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

கரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்த இந்தியா, இரண்டாவது அலையை எதிர்த்து இன்னும் தனது நெடிய போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தினசரி தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்கிறது.

நேற்று (7.8.2021) ஒரே நாளில் மேலும் 44 ஆயிரத்து 643 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 18 லட்சத்து 56 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது.   16 லட்சத்து 40 ஆயிரத்து 287 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. தினசரி பாதிப்பு விகிதம் 2.72 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 2.41 சதவீதமாகவும் இருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

No comments:

Post a Comment