கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குழந்தைகள் 6 நாளில் குணம் பெறலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 6, 2021

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குழந்தைகள் 6 நாளில் குணம் பெறலாம்

லண்டன்,ஆக.6- இந்தியாவில்  கரோனா  தொற்றின் 3ஆவது அலையில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பாதிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

அவர்களுக் கான  தடுப்பூசி  இன்னும் வராதது தான் இதற்கு காரணம். இந்த நிலையில் குழந்தை களுக்கான கரோனா பாதிப்பு தொடர்பாகதி லான்செட் சைல்டு அண்ட் அடல்சன்ட்பத்திரி கையில் ஒரு ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தில்ஸோ கோவிட் ஸ்டடி திறன்பேசி செயலிமூலம், 5-17 வயது சிறுவர், சிறுமிகள் 25 ஆயிரம் பேரிடம் இருந்து சேகரிக் கப்பட்ட தரவுகள் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் வருமாறு:-

நீண்ட கால கரோனா அறிகுறி களை அனுபவிக்கும் குழந்தை களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஒரு சில குழந்தைகள் மட்டுமே, நீண்ட கால பாதிப்புகளை அனு பவிக்கின்றன என்று ஆராய்ச்சி யாளர் பேராசிரியர் எம்மா டுங்கன் தெரிவித்துள்ளார்.

சில பெரியவர்கள் நீடித்த நோய் பாதிப்பை அனுபவிக்கின்றனர். இவர்களுக்கு 4 வாரங்களோ அதற் கும் கூடுதலாகவே அறிகுறிகள் தொடரும்.

பொதுவாககுழந்தைகள் சராசரியாக 6 நாளில் கரோனாவால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தனர். நோயின் முதல் வாரத்தில் சராசரி யாக 3 அறிகுறிகள் அவர்களுக்கு இருந்தது.

லேசான பாதிப்பையே அனுபவிக்கின்றனர். இவர்கள் 6 நாளில் குணம் அடைவார்கள்.

நீண்ட காலம் தொற்றால் பாதிக்கப்படுகிற குழந்தைகள் சோர்வு அடைகிறார்கள். 84 சதவீத குழந்தைகள், நோயின் ஒரு கட்டத்தில் சோர்வுடன் இருப்ப தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவலி, வாசனை இழப்பு ஆகியவை கரோனாவின் பொது வான அறிகுறிகள். கரோனா வைரஸ் சோத னையில்நெகட்டிவ்முடிவு வந்த பின்னர் கூட குழந் தைகள் சளி மற்றும் காய்ச்சலால் அவதிப் படலாம். இவ்வாறு அதில் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment