வாசிங்டன், ஆக.6 தடுப்பூசி உற்பத்தி செய்ய இந்தியாவுக்கு உதவி அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரசை எதிர்த்து போராடும் வகையில் உலக நாடுகளுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியா போன்ற நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி களை உற்பத்தி செய்யும் திறனை வழங்க அமெரிக்கா முயன்று வருவதாக அந்த நாட்டின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் பல நூறு கோடி கரோனா தடுப்பூசி தேவைப் படும் சூழலில், 50 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்க அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. மேலும் இந்தியா போன்ற நாடுகளுக்கு, தடுப் பூசிகளை அவர்களே உற்பத்தி செய் யும் திறனை வழங்கவும் நாங்கள் முயற்சிக்கிறோம். அதற்காக நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம். அதைத் தான் இப்போது செய்கிறோம். இது இலவசம். நாங்கள் யாரிடமும் எதையும் வசூலிக்கவில்லை. நாங்கள் எங்களால் முடிந்தவரை செய்ய முயற்சிக்கிறோம்.
உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கான கூட்டு உலகளாவிய முயற்சியில் நாங்கள் வேறு எந்த நாட்டையும் விட அதிக பங்களிப்பை வழங்கி யுள்ளோம். இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான எங்கள் கூட்டாண்மை மூலம் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யும் முயற்சிகளை நாங்கள் ஆதரித்துள் ளோம். இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.

No comments:
Post a Comment