ஆப்கான் படை தடுத்து நிறுத்தியது
காபூல், ஆக.6 கெரத் மாகாணத்தில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட சல்மா அணையின் மீது தலீபான்கள் நடத்திய தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு ராணுவத்துக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான உள்நாட்டு போர் கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்து வருகிறது. தலீபான்களுக்கு எதிரான இந்த போரில் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு பெரும் பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து அங்கு நிலைமை மோசமாகி வருகிறது.
ஏற்கெனவே ஆப்கானிஸ்தானின் சரிபாதி பகுதிகள் தலீபான்களின் வசம் உள்ள நிலையில், ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றும் நோக்கில் தலீபான்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். பன்னாட்டு படைகளின் வெளியேற்றம் காரணமாக சற்று பலவீனம் அடைந்துள்ள ஆப்கானிஸ்தான் ராணுவம் தலீபான்களின் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் அரசு படைகள் வசம் உள்ள முக்கிய நகரங்களை தலீபான்கள் விரைவாக கைப்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கெரத் மாகாணத்தில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட சல்மா அணையின் மீது தலீபான்கள் நடத்திய தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.
இந்த மோதலில், தலீபான்களின் தரப்பில் பயங்கர உயிர் சேதம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக தலீபான்கள் தப்பி ஓடிவிட்டனர் என்றும் கூறியுள்ளது.

No comments:
Post a Comment