சேலம், ஆக. 3- இம்மாதம் வீட்டு உபயோக எரிவாயு விலையில் மாற்றம் செய் யப்படவில்லை. ஆனால், வர்த்தக எரிவாயு உருளை விலை ரூ.74 அதிகரிக்கப் பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் கூட்ட மைப்பினர், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர். எரிவாயு உருளை விலை மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகிறது. இந்த மாதத்திற்கான (ஆகஸ்ட்) எரிவாயு உருளை விலையை எண்ணெய் நிறுவனங்க ளின் கூட்டமைப்பு அறிவித்தது. அதில், நாடு முழு வதும் 14.2 கிலோ வீட்டு உபயோக மானியமில்லா எரிவாயு உருளை விலை யில் மாற்றத்தை ஏற்படுத்த வில்லை. டில்லி, மும் பையில் ரூ.834 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.861 ஆகவும், சென்னையில் ரூ.850.50 ஆகவும் விற்கப் படுகிறது.
சென்னையில் கடந்த மாதம் ரூ.1683க்கு விற்கப் பட்ட வர்த்தக எரிவாயு உருளை, ரூ.1757 ஆக உயர்ந்துள்ளது. சேலத் தில் ரூ.1645இல் இருந்து ரூ.73.50 அதிகரித்து, ரூ.1718.50 ஆக உயர்ந்து உள்ளது. பன்னாட்டு சந் தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 5 நாட் களாக மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அத னால் வர்த்தக எரிவாயு உருளை விலையை உயர்த் தியிருப்பதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப் பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment