டில்லி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் ரூ.90 ஆயிரமாக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 5, 2021

டில்லி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் ரூ.90 ஆயிரமாக உயர்வு

புதுடில்லி, ஆக.5 ஊதியத்தை உயர்த்திய பிறகும், நாட்டி லேயே குறைவான ஊதியம் பெறுவது டில்லி சட்டமன்ற உறுப்பினர்கள்தான் என்று டில்லி அரசு கூறியுள்ளது.

டில்லி யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஊதியம் உயர்த்தப்படவில்லை. அதனால், மற்ற மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர் களுக்கு சமமாக ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச் சகத்துக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று, ஊதியத்தை உயர்த்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் சிபாரிசு செய்தது. அதை யடுத்து, டில்லி சட்டமன்ற உறுப்பினர்கள் ஊதியம் ரூ.90 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதில், ஊதியம் ரூ.30 ஆயிரமாகவும், இதர படிகள் ரூ.60 ஆயிரமாகவும் இருக்கும்.

இதுவரை அவர்கள் ஊதியம் ரூ.12 ஆயிரம், இதர படிகள் ரூ.41 ஆயிரம் என மொத்தம் ரூ.53 ஆயிரம் பெற்று வந்தனர். ஊதியத்தை உயர்த்திய பிறகும், நாட்டிலேயே குறைவான ஊதியம் பெறுவது டில்லி சட்டமன்ற உறுப்பினர்கள்தான் என்று டில்லி அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டுகளில் 230 அரசியல் படுகொலைகள்

புதுடில்லி,ஆக.5- இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 230 பேர் அரசியல் காரணங்களுக்காக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப் பட்டவர்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு, நாடாளுமன்ற மக்களவையில்  3.8.2021 அன்று ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்தார்.  அதன் விவரம் வருமாறு, அரசியல் காரணத்திற்காக கடந்த 2017ஆம் ஆண்டில் 99 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2018ஆம் ஆண்டு 59 பேரும், 2019ஆம் ஆண்டு 72 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 49 பேரும், மேற்கு வங்க மாநிலத்தில் 27 பேரும், பீகார் மாநிலத்தில் 26 பேரும் அரசியல் காரணங்களுக்காக கொல்லப் பட்டுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் கருநாடக மாநிலத்தில் 24 பேரும், கேரளா மற்றும் மகாராட்டிரா ஆகிய மாநிலங்களில் 15 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment