"சாய் பாபாவின் தீர்க்க தரிசனம்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 5, 2021

"சாய் பாபாவின் தீர்க்க தரிசனம்"

ஆசிரமத்தில் பெண்களிடம் பாலியல் வன்முறை மோசடி: சாமியார் கைது

திருமலை,ஆக.5- ‘என்னுடன் பாலியல் உறவு கொண்டால்பாசி டிவ் எனர்ஜிகிடைக்கும்,’ என கூறி பெண்களை சீரழித்த  சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுபற்றி தெலங்கானா மாநிலம், நல்லகொண்டா மாவட்டத்தில் காவல்துறை டிஅய்ஜி .வி.ரங்கநாத்  கூறியதாவது:

தெலங்கானா மாநிலம், நல்ல கொண்டா மாவட்டம், பி..பள்ளி அடுத்த அஜ்மாபூர் கிராமத்தில்சிறீசாய் சர்வஸ்வாமு சாய் மான்சி தொண்டு அறக்கட்டளைஎன்ற பெயரில் ஆசிரமம் அமைத்து பக்தர்களிடம் யாகம், பூஜைகள் செய்வதாகக் கூறி மோசடி செய்து சாமியார் சாய் விஸ்வ சைதன்யா பணம் பறித்துள்ளார். மேலும், பெண் பக்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள் ளார்.

சாய்பாபாவின் தீர்க்க தரிசனம்என்ற பெயரால் பணம் பறித்து வந்துள்ளார். மூலிகைகள், லேகியம், எண்ணெய் ஆகியவற்றை உடல் நலக்குறைவு உள்ளவர் களுக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறி போலி யான வற்றை விற்றுள்ளார். ஆந்திரா மாநிலம், கிருஷ் ணா மாவட்டம் நந்திகா மாவை சேர்ந்த இவர், அய்தராபாத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கம்ப்யூட்டர் மய்யத்தை அமைத்து பொது மக்களிடம் சீட்டு பிடிப்பதாக கூறி 1 கோடி ரூபாய் அளவில்  ஏமாற்றிய வழக்கில் கைது செய்ய ப்பட்டு சிறை யில் அடைக்கப் பட்டார்.  பிணையில் வெளிவந்த அவர்,  சாய்பாபா பக்தர் என்கிற போர் வையில் தனியார் தொலைக் காட்சியில் உரையாற்றி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தீர்க்க தரிசனம் என்ற பெயரில் காட்சிப் பதிவுகளுடன் யூடியூப் சேனலை தொடங்கினார்.

பெண்களிடம் மோசடி

என்னுடன் உடலுறவு கொ ண் டால்  பாசிடிவ் எனர்ஜி கிடைக் கும் என கூறி பல பெண் களுடன் ஆசிரமத்தில் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள் ளார்.  புகார்கள் அடிப் படையில் சைதன்யா, அனந்த புரத்தை சேர்ந்த வீடியோ எடிட்டர் கவுதம், டேட்டா என்ட்ரி ஆப ரேட்டராக இருந்த கம்மத் தை சேர்ந்த ஸ்ருஜன் குமார்,  ஆக்குதோடப்பள்ளியை சேர்ந்த ஓட்டுநர் விஜய்  ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும்,  இவர்களிடம் இருந்து ரூ.26 லட்சம் ரொக்கம், 500 கிராம் தங்க நகைகள், மோசடி சாமியாரின் 2ஆவது மனைவி சுஜாதா மீது உள்ள ரூ. 1.50 கோடி மதிப்பிலான பத்திரங்கள், 17 ஏக்கர் நிலம், யூடியூப் சேனலுக்கு பயன்படுத்திய 7 லேப் டாப்கள், 4 செல்பேசிகள், 1 கார் பல்வேறு வகையான மூலிகைகள், பூஜை  பொருட்கள், 50 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள்  பறிமுதல் செய்யப் பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment