நிட்டி ஆயோக் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் மின்சக்தி விநியோக நிறுவனங்களுக்கு ஒரே ஆண்டில் ரூ.90,000 கோடி இழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 5, 2021

நிட்டி ஆயோக் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் மின்சக்தி விநியோக நிறுவனங்களுக்கு ஒரே ஆண்டில் ரூ.90,000 கோடி இழப்பு

புதுடில்லி, ஆக. 5- இந்தியாவில் உள்ள மின்சக்தி விநியோக நிறுவனங்கள் 2020- 2021 ஆம் நிதியாண்டில் எதிர் கொண்ட இழப்பு மொத் தம் ரூ.90,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிட்டி ஆயோக்கும், ஆர்எம்அய் அமைப்பும் வெளியிட்ட மின்சக்தி விநியோகத்துறை குறித்த அறிக்கையில் இந்த தக வல் தெரியவந்துள்ளது.

நமது நாட்டில் மின் சக்தி விநியோகத் துறை யில் கொள்கை முடிவு களை மேம்படுத்துவதற்கு மான முயற்சியாக, இத் துறையை மாற்றியமைப்ப தற்கான சீர்திருத்த வழி முறைகளை பரிந்துரைக் கும் அறிக்கையை நிட்டி ஆயோக் வெளியிட்டு உள்ளது.

மின்சக்தி விநியோகத் துறையை மாற்றியமைப் பது தொடர்பான இந்த அறிக்கையை நிட்டி ஆயோக்கும், ஆர்எம்அய் அமைப்பும் இணைந்து தயாரித்துள்ளன. இதனை நிட்டி ஆயோக் துணைத் தலைவர் டாக் டர் ராஜீவ் குமார், நிட்டி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வி.கே.சரஸ்வத், தலைமை செயல் அதிகாரி அமிதாப்காந்த், ஒன்றிய மின்சக்தித் துறை செயலர் அலோக் குமார் உள் ளிட்ட உயர் அலுவலர் கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இந்தியாவில் பெரும் பாலான மின்சக்தி விநி யோக நிறுவனங்கள் ஆண்டு தோறும் இழப்பை எதிர்கொள்கின்றன. 2020- 2021ஆம் நிதியாண் டில் இந்த நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பின் அளவு மொத்தம் ரூ.90,000 கோடியாகும். அதிகரித்து வரும் இந்த இழப்புகளால் இந்த நிறுவனங்கள் மின் உற்பத்தி ஜெனரேட்டர் களுக்கான கட்டணங் களை செலுத்த இயலா மல், உயர்தர மின்சக்தியை உறுதி ப்படுத்துவதற்கான முதலீடுகளை செய்ய இய லாமல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்த இயலாமல் சிரமப்படுகின் றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment