லண்டன், ஆக. 5- ஓமன் அருகே எண்ணெய் கப் பல் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் என நேட்டோ அமைப்பும், அய்ரோப்பிய யூனியனும் குற்றம்சாட்டியுள்ளன.
லண்டனில் செயல் பட்டு வரும் இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனத்தின் எம்வி மெர்சிர் ஸ்ட்ரீட் என்ற எண்ணெய்க் கப் பல் ஓமன் நாட்டின் தலை நகர் மஸ்கட்டில் இருந்து 300 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள மாசிரா தீவுக்கு அருகே அரேபியன் கட லில் சென்று கொண்டி ருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்த தாக்குதலில் இரு கப்பல் பணியாளர் கள் உயிரிழந்தனர். அவர் களில் ஒருவர் பிரிட்ட னைச் சேர்ந்தவர். மற் றொருவர் ருமோனியா நாட்டவர் ஆவார்.
இத்தாக்குதலின் பின் னணியில் ஈரான் இருப் பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது. இந்த நிலையில் ஓமன் அருகே எண்ணெய் கப்பல் தாக்கு தல் விவகாரத்தில் ஈரான் மீது நேட்டோ அமைப் பும், அய்ரோப்பிய யூனி யனும் குற்றம்சாட்டியுள் ளன.
அய்ரோப்பிய யூனி யன் செய்தித் தொடர் பாளர் நபிலா மஸ்ரலி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது:
கடல் போக்குவரத்து சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் ஈரான் மேற் கொள்ளும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது. கப்பல் போக் குவரத்துக்கு உரிய பாது காப்பு இருப்பது அவசி யமானது. இந்த விஷ யத்தை அய்ரோப்பிய யூனி யன் கடுமையாக பார்க்கி றது. உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார்
இதுபோலவே நேட்டோ அமைப்பும் ஈரானை குற்றம்சாட்டி யுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக் கையில் ‘‘எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக் குரியது. கடல்வழி போக் குவரத்து சுதந்திரத்தை நேட்டோ எப்போதும் வலியுறுத்தி வருகிறது. இந்தத் தாக்குதலை நடத் தியதன் மூலம் மத்திய ஆசியாவில் அமைதியை ஈரான் சீர்குலைக்கும் செயலில் இறங்கியுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:
Post a Comment