அபுதாபி, ஆக. 5- இந்தியாவி லிருந்து செல்லும் விமானங்க ளுக்கு ஒரு சில நாடுகளில் தற்காலிக தடை விதித்கப் பட்டுள்ளது. அந்த வகையில் தொற்று பரவல் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக இந் திய விமானங்களுக்கு தடை விதித்து அய்க்கிய அரபு அமீரகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானப் போக்குவரத்திற்கான தடையை ஆகஸ்ட் 5(நாளை) முதல் நீக்க முடிவு செய்துள்ள தாக நாட்டின் தேசிய அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள் ளது.
எனினும் அய்க்கிய அரபு அமீரகம் வரும் பயணிகள் நுழைவு அனுமதி பெற விண் ணப்பிக்க வேண்டும் எனவும், அமீரகத்திற்கு வருகை தரும் இந்தியப் பயணிகள் கரோனா தடுப்பூசி செலுத்திய சான்று அல்லது பயணம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கரோனா பரி சோதனை சான்றிதழை சமர்ப் பிக்க வேண்டும் எனவும் அறி வுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment