வேப்பனஹள்ளி அருகே அலகு குத்தி 40 அடி கிரேனில் தொங்கிய பக்தர் விழுந்து காயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 5, 2021

வேப்பனஹள்ளி அருகே அலகு குத்தி 40 அடி கிரேனில் தொங்கிய பக்தர் விழுந்து காயம்


வேப்பனஹள்ளி, ஆக. 5- கரோனா பரவ லைக் கட்டுப்படுத்த ஆடிக்கிருத் திகை மற்றும் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாட அரசு தடை விதித்திருந்தது. கோயில்களில் பூஜை செய்ய மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது

அதன்படி, வேப்பன ஹள்ளி ஒன்றியத்திற் குட்பட்ட எட்ரப்பள்ளி கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில், ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்காக சின்ன கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (36) உள்பட 4 பேர், நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் விமான அலகு (முதுகில் அலகு குத்திக்கொண்டு) குத்தி பெரிய கிரேனில், 40 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியவாறு கோயிலுக்கு வந்தனர்.

மேட்டுப்பாளையம் என்னுமிடத்தில் கிரேன் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக முதுகில் குத்தியிருந்த கொக்கி சதையை கிழித்ததால் ஆகாஷ் சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில், நல்வாய்ப்பாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால், மற்ற மூவரும் கீழே இறங்கி, நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினராம்.

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை, ஆக.5 தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,

 தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து விட வேண்டும். பன்னாட்டு சட்டங்களை பின்பற்றாமல் இலங்கைப் படையினர் மீனவர்களை தாக்குவது கண்டனத்திற்குரியது.

நம் நாட்டு மீனவர்களின் உயிரையும் உடமை களையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த பிரச்சினைக்கு நீடித்த அரசியல் தீர்வை காண வேண்டும்.

மேலும், இலங்கை கடற்படை பன்னாட்டு சட்டங்களை உறுதி செய்ய வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசுக்கு ஒன்றிய அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகை மீனவர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தை சுட்டிக்காட்டி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment