உலகின் மிகச்சிறந்த மாணவராக இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு: அமெரிக்க பல்கலை. அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 5, 2021

உலகின் மிகச்சிறந்த மாணவராக இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு: அமெரிக்க பல்கலை. அறிவிப்பு

வாசிங்டன், ஆக. 5- உலகின் மிகச் சிறந்த மாணவர்களில் ஒருவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடாஷா பெரி என்னும் சிறுமியை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை. தேர்ந் தெடுத்து உள்ளது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப் கின்ஸ் பல்கலை. விடுத்துள்ள செய் திக் குறிப்பில் தெரிவித்து உள்ள தாவது: நியூஜெர்சியில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது நடாஷா பெரி, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலையின் 2020 -- 2021 இளம் திறமையாளர்கள் தேடல் மய்யத்தில் பதிவு செய் திருந்த சுமார் 19,000 மாணவர்களில் ஒருவராவார். இவர், அமெரிக்கா வின் கல்வி ஊக்கத் தொகை தகுதித் தேர்வு (சாட்) மற்றும் அமெரிக்க கல்லூரி நுழைவுத் தேர்வு (ஆக்ட்) ஆகிய தேர்வுகளில் வெளிப்படுத்தி யுள்ள திறமையை அடிப்படை யாகக் கொண்டு, உலகின் தலை சிறந்த மாணவர்களில் ஒருவராக, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை.இவரை தேர்ந்தெடுத்து உள்ளது.

தற்போது 5ஆம் வகுப்பு படித்து வந்தாலும், தகுதித் தேர்வுகளில் அவர் அளித்த பதில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு இணை யான திறன் கொண்டதாக இருந் தது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் கல்லூரியில் இணைந்து படிக்க விரும்பும் மாணவர்கள் சாட் அல்லது ஆக்ட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment