அமைச்சர் சக்கரபாணி தகவல்
சென்னை, ஆக. 4- குடும்ப அட்டைக்கு விண்ணப் பித்த 15 நாட்களுக்குள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித் துள்ளார்.
இதுகுறித்து தலை மைச் செயலகத்தில் செய் தியாளர்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அளித்த பேட்டி வருமாறு:-
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவ லால் ஏற்பட்ட பாதிப்பிற் கான நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்க ளுக்கு ரூ.4 ஆயிரம் மற் றும் 14 பொருட்கள் அடங் கிய தொகுப்பு ஆகியவை 99 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுவிட்டன.
கடந்த ஜூலை 31ஆம் தேதியுடன் அதை வழங் கும் நடவடிக்கைகள் முடி வுக்கு வந்துவிட்டாலும், அந்த நிவாரணங்களை பெறாதவர்கள் சம்பந்தப் பட்ட மண்டல அலுவலரிடம் விண்ணப்பித்து அவற்றை பெற்றுக்கொள் ளலாம்.
குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த 15 நாட் களுக்குள் தகுதியானவர்க ளுக்கு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் வரை 1.74 லட்சம் விண்ணப்பங்கள் நிலு வையில் இருந்தன. மே, ஜூன், ஜூலையில் 5.45 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
ஆக மொத்தம் 7.19 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 5.87 லட்சம் விண்ணப் பங்கள் ஆய்வு செய்யப் பட்டன. அவற்றில் 4.52 லட்சம் மனுக்கள் ஏற்கப் பட்டன. 1.35 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட் டன. 3.38 லட்சம் பேருக்கு புதிய குடுமப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரே நாடு ஒரே குடும்ப கார்டு என்ற திட்டம் தமிழ்நாட்டில் செயல்பாட் டில் உள்ளது. சில மாவட் டங்களில் அந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்.
குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பை முதல்-அமைச் சர் வெளியிடுவார். இந்த திட்டத்திற்காக, ரேஷன் அட்டைகளை மனைவி யின் பெயருக்கு மாற்றம் செய்ய பலர் முற்படுவதா கவும், அதற்காக இ-சேவை மய்யங்களில் காத்திருப்ப தாகவும் தகவல்கள் வரு கின்றன. இதில் யாரும் பீதி அடைய வேண்டாம். உரிய நேரத்தில் இந்தத் திட்டம் குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார்.
ரேஷன் கடைகளுக்கு பொருள் வழங்குவதற் கான சிவில் சப்ளைஸ் டெண்டர் விவகாரத்தில் தவறுகள் கண்டறியப்பட் டால் நடவடிக்கை எடுக் கப்படும். சட்டம் தன் கட மையைச் செய்யும். இவ் வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment