தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கைகள் விவரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கைகள் விவரம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை எத்தனை வெள்ளை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை எதற்காக தாக்கல் செய்யப்பட்டன என்ற விவரங்கள் பின்வருமாறு:

இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கைகள்:

1977 - 2001 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டப்பேரவையில் 9 வெள்ளை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

1977 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள பாதிப்புக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக அப்போதைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சியில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். தாக்கல் செய்த வெள்ளை அறிக்கைமீது 4 நாள்கள் விவாதமும் நடைபெற்றது.

1981 ஆம் ஆண்டு உணவுப் பொருள்களின் கையிருப்பு மற்றும் விலையேற்றம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மூன்று நாள்கள் விவாதம் நடைபெற்றது.

1983 இல் தமிழ்நாட்டில் நிலவிய வறட்சி நிலைமை குறித்தும், 1984 ஆம் ஆண்டு வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் குறித்தும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பின் 1994 ஆம் ஆண்டு பெய்த மழை, புயல், வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து அதன் மீது மூன்று  நாள்கள் விவாதம் நடைபெற்றது. 

1996 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் நிவாரண நட வடிக்கைகள் தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் கலைஞர் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்.

1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு தொடர்பாகவும், 2000 ஆம் ஆண்டில் எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி. பிரிவினருக்கு அரசு பணிகளில் வழங்கிய இட ஒதுக்கீடு தொடர்பாகவும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இறுதியாக சட்டப்பேரவையில் 2001 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பாக முன்னாள் முதல மைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த வெள்ளை அறிக்கை தொடர்பாக எந்த விவாதமும் நடைபெற வில்லை.

No comments:

Post a Comment