காரைக்குடியில் இருந்து திருவாரூருக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 3, 2021

காரைக்குடியில் இருந்து திருவாரூருக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை, ஆக.3 காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து திருவாரூருக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் நாளை (4.8.2021) புதன் கிழமை முதல் இயக்கப் படுகிறது.

மதுரை கோட்டத் துக்கு உட்பட்ட காரைக் குடியில் இருந்து அகல ரயில் பாதையில் திருவாரூ ருக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பல் வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே, அந்த பாதையில் ரயில்கள் இயக்க தென்னக ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, காரைக் குடி-திருவாரூர் மார்க்கத் தில் நாளை (புதன்கிழமை) முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படு கிறது. இந்த ரயில் (. எண்.06197) திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாட்களில் காலை 8.15 மணிக்கு புறப்படும். மதியம் 2.15 மணிக்கு காரைக்குடி ரயில் நிலை யம் வந்தடையும்.

மறுமார்க்கத்தில் இந்த  ரயில் (.எண்.06198) ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாட்களில் காரைக் குடியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திருவாரூர் ரயில் நிலையம் சென்றடையும்.

டெமு பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரயில், மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்லிக்கா வல், அம்மனூர், ஆலத்தம் பாடி, மணலி, திருத்துறைப் பூண்டி, தில்லைவளாகம், முத்துப்பேட்டை, அதி ராம்பட்டினம், புதுவயல், பேராவூரணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


No comments:

Post a Comment