சென்னை,ஆக.3- ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட வழக்கு இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத் தியது. தமிழ்நாட்டில் தேனி மருத்துவக்கல்லூரியில்தான் முதலில் இது கண்டறியப்பட் டது. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட் டம் செய்ய ரூ.20 லட்சம் கைமாறப் பட்டதாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக சி.பி.சி. அய்.டி. காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தேனி மருத்துவ கல்லூரி மாணவர் உதித் சூர்யா என்பவர் ஆள்மாறாட்ட வழக் கில் கைது செய்யப்பட்டார். அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசனும் கைதானார்.
இதைத்தொடர்ந்து சென் னையில் உள்ள 3 மருத்துவ கல்லூரிகளில் படித்த மாணவர் கள் பிரவீன், அபிராமி, ராகுல் மற்றும் அவர்களின் தந்தைகளும் கைதானார்கள். கேரளாவில் ‘நீட்’ பயிற்சி மய்யம் நடத்தி வந்த ஜார்ஜ் ஜோசப் என்பவரும் கைதானார். தேனி மாணவர் உதித் சூர்யாவுக்காக ஆள் மாறாட்டம் செய்து ‘நீட்’ தேர்வை எழுதிய மாணவர் முகமது இர்பான் என்பவரும் சிக்கினார். இதுபோல மொத்தம் 7 மாணவர்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் கரோனா தொற்று நாட்டையே ஆட்டிப் படைத்ததால், இந்த வழக்கில் எடுக்கவேண்டிய நடவடிக்கை வேகம் குறைந்து காணப்படு கிறது.
இதற்கிடையே சென்னை மருத்துவ கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த தனுஷ் குமார் என்ற மாணவரும் ஆள் மாறாட்டம் செய்து, ‘நீட்’ தேர் வில் வெற்றி பெற்றதாக புகார் கொடுக்கப்பட்டது. இவர் ஓசூரைச் சேர்ந்தவர். இவருக்கு ஹிந்தி தெரியாது. ஆனால் பீகார் மாநிலத்தில் உள்ள கயா ‘நீட்’ தேர்வு மையத்தில் ஹிந்தி யில் தேர்வு எழுதியதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இவருக்கு இந்தி தெரிந்த ஒருவர் ஆள்மா றாட்டம் செய்து தேர்வு எழுதி யது வெளிச்சத்துக்கு வந்தது.
இது தொடர்பாக சி.பி.சி. அய்.டி. காவல்துறையினர் தனி யாக ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
மாணவர் தனுஷ்குமாரும், அவரது தந்தையும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். இதற் கிடையில் நேற்று (2.8.2021) இந்த வழக்கில் திடீரென்று வேகம் பிடித்தது.
பெங்களூருவை சேர்ந்த சிறீஹர்ஷா (வயது 38) என்ற இடைத்தரகரை சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் இந்த வழக் கில் கைது செய்தனர். சிறீஹர் ஷாதான் ரூ.20 லட்சம் வாங் கிக்கொண்டு, தனுஷ்குமாருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து ‘நீட்’ தேர்வு எழுத வைத் துள்ளார். எனவே அவர் சென்னை அழைத்து வரப்பட்டார். அவரி டம் தீவிர விசாரணை நடத்தப் பட்டது. பின்னர் அவர் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதி மன்ற காவலில் சிறையில் அடைக் கப் பட்டதாக சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment