சென்னை, அக். 3- தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று (2.8.2021) முத் தமிழ் அறிஞர் கலைஞரின் உரு வப்படத்தை மாண்புமிகு இந் தியக் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத்கோவிந்த் அவர்கள் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா - நூற்றாண்டு காணும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் - அதிக காலம் ஆட்சியிலிருந்த மேனாள் முதல மைச்சர் முத்தமிழ் அறிஞர் கலை ஞர் அவர்களின் உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி நேற்று (2.8.2021) மாலை தலைமைச் செயலக சட்டமன்றப் பேரவை மண்ட பத்தில் வரலாற்றுக் காவியத்தின் மணம் வீசும் பொன்னாள் விழாவாக மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் மாண்புமிகு திரு.பன் வாரிலால் புரோகித் தலைமை தாங்கி உரையாற்றினார். முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் கள் முன்னிலை வகித்து உரை யாற்றினார். தலைமை விருந்தி னராக வருகை புரிந்து பங்கேற்ற மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள், மேனாள் முதலமைச் சர், எந்நாளும் நினைவில் வாழும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைத்து தலைமை உரையாற்றினார்.
முன்னதாக தமிழ்நாடு சட் டப்பேரவைத் தலைவர்மு.அப்பாவு அனைவரையும் வர வேற்றுப் பேசினார். சட்டப் பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி நன்றியுரையாற் றினார்.
நினைவுப் பரிசு வழங்கல்
இவ்விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை, புத்தகம், நினைவுப் பரிசை வழங்கினார். அதே போன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை, புத்தகம், நினை வுப் பரிசை வழங்கினார். முத லமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு பொன்னாடை, புத்தகம், நினைவு பரிசை வழங்கினார்.
தமிழர் தலைவர் பங்கேற்பு
வரலாற்றுக் காவியத்தின் மணம் வீசும் இப்பொன்னாள் விழாவில் - முதல் வரிசையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம் யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கொ.ம. தே.க.தலைவர் ஈஸ்வரன், முஸ் லீம் முன்னேற்றக் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, திமுக நாடா ளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப் பினர் கனிமொழி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் கொறடா கோ.வி.செழியன், தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, ஏ.வ.வேலு உள் ளிட்ட அமைச்சர் பெருமக்கள் மற்றும் நாடாளுமன்ற, மாநிலங் களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment