டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· காஷ்மீரில் சிறப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகும், மனித உரிமைகள் மீறல், தீவிரவாதம் அதிகரிப்பு உள்ளதாக தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
டெக்கான் கிரானிகல், சென்னை:
· வீட்டுக்கே நேரடியாக வந்து சிகிச்சையளிக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· கோவிட் மூன்றாவது அலை ஜிடிபி வளர்ச்சியை 7 சதவீதமாக குறைக்கலாம் என பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி கருத்திட்டுள்ளார்.
· மயிலாப்பூரில் உள்ள சிறீ கபாலீஸ்வரர் கோவிலில் தமிழ் அர்ச்சனை (தமிழில் கடவுளரை வழிபடுதல்) நிகழ்ச்சியை ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தொடங்கி வைத்தார். இன்று முதல், இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் உள்ள 47 முக்கிய கோவில்களில் பின்பற்றப்படும், இறுதியில், இது அற லையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 539 கோவில்களுக்கு நீட்டிக்கப்படும்.
தி இந்து:
· ஒன்றிய அரசின் ஏழு அய்.அய்.டி.களில் இடை நிற்றல் விகிதத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 60 சதவீத மாணவர்கள் என மாநிலங்களவையில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
· ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment