ஆஸ்திரேலியாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 8, 2021

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரிப்பு

சிட்னி, ஆக. 8- விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாகாணங்களில் டெல்டா வகை கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப் பட்டது.

கரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப் படுத்திய ஆஸ்திரேலியா தற்போது 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது.முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப் பட்ட டெல்டா மாறுபாடு கரோனா வைரஸ் ஆஸ்திரேலி யாவை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.

அங்கு கடந்த மாதத்தின் பிற்பகுதியில் டெல்டா வகை கரோனா வைரஸ் பரவ தொடங் கியது. விக்டோரியா, குயின்ஸ் லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாகாணங்களில் டெல்டா வகை கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த 3 மாகாணங்களிலும் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிட்னி, மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது.

இதில் மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் நகரங்களில் மெல்ல மெல்ல வைரஸ் பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து ஊர டங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டன. ஆனால் சிட்னி நகரில் அதற்கு நேர்மாறாக கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தது.

அங்கு ஒவ்வொரு நாளும் கரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

இந்தநிலையில், பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சிட்னி நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆறு வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில்  262 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கரோனா காரணமாக 5 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், “டெல்டா வகை கரோனாவை கட்டுப்படுத்துவது உலகம் முழு வதும் பல பகுதிகளுக்கு சவாலாக உள்ளது.

நாம் முயற்சி செய்து வைரஸை அழிக்க முடியும். ஆனால், பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசியே முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.

இத னால், நியூகாசில் உள்பட ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதி களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக் டோரியா மாகாணத்தில் ஏழு நாள் முழு ஊரடங்கு போடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment