வாசிங்டன், ஆக. 8- அமெரிக்காவில் இன்னும் 2 மாதங்களில் வேலை வாய்ப்பு அடிப்படையிலான ஒரு லட்சம் கிரீன் கார்டுகள் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. அமெ ரிக்காவில் எச்-1பி விசாவின் கீழ் பணி புரியும் ஆயிரக்கணக்கானோர் நிரந்தர குடியுரிமை இன்றி தவித்து வருகின்றனர். இவர்கள் நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும் 1,40,000 பேருக்கு வேலைவாய்ப்பு அடிப் படையிலான கிரீன் கார்டு ஒதுக் கீடு செய்து வருகிறது. இந்தாண்டு, முன்பு எப்போதும் இல்லாத வகை யில் 2,61,500 பேருக்கு வேலை வாய்ப்பு அடிப்படையிலான நிரந் தர குடியுரிமை வழங்க ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இந்தாண்டு ஒரு லட்சம் கிரீன் கார்டுகள் பயன்படுத்தப்படாமல் வீணாக் கப்பட இருப்பதாக அமெரிக்க குடியமர்வு சேவை துறையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்திய அய்டி நிபுணர் சந்தீப் பவார் தெரிவிக் கையில், `அமெரிக்காவில் அக்டோ பர் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது. எதிர்பாராத விதமாக, சட்டப்படி இந்த விசாக் கள் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பயன்படுத்த முடியாமல் போனால், அவை வீணாக போய் விடும். சட்டப்படி எச்1-பி விசாவில் தங்கி வேலைபார்க்கும் ஆயிரக் கணக்கானோரில் பலர் இதன் மூலம் நிரந்தர குடியுரிமை பெற முடியும். ஆனால், போதிய விசாக் கள் இருந்தும் பைடன் நிர்வாகம் அதை பயன்படுத்த எந்த நடவடிக் கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதால், ஒரு லட்சம் கிரீன் கார்டுகள் பயன்படுத்தப்படாமல் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது,’ என்று கூறினார்.
ஒரு லட்சம் கிரீன் கார்டுகள் வீணாவதை தடுக்க, அதிபர் பைட னின் நிர்வாகத்தை எதிர்த்து, இந்தி யர்கள், சீனர்கள் உள்பட 125 பேர் கொண்ட குழு, அமெரிக்க நீதிமன் றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment