தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 8, 2021

தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

 * தந்தை பெரியார் 143ஆவது பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடுவது

* பெரியாரியல் பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவினை வல்லத்தில் சிறப்பாக நடத்துவது

* தந்தை பெரியார் சிலைகளுக்கு அமைக்கப்பட்டிருக்கும் கூண்டுகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றம்

தஞ்சை,ஆக.8- தஞ்சை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம், தஞ்சை கீழராஜவீதி பெரியார் இல்லத்தில் 5.8.2021 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட  தலைவர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார்.

காப்பாளர்  வெ.ஜெயராமன், தஞ்சை மண்டல தலைவர்   மு.அய்யனார், தஞ்சை மண்டல செயலாளர் .குருசாமி ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.

தஞ்சை மாவட்ட செயலாளர் .அருணகிரி, அனைவரையும் வரவேற்றும், இக்கூட்டத்தை ஒருங்கிணைத்தும் இணைப்புரை வழங்கினார்.

மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தந்தை பெரியார் 143ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழகத் தோழர்கள் அனைவரது இல்லத்திலும் கழகக் கொடிகளை ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கருத்துரை யாற்றினார்.

இக்கூட்டத்தில்  கழகப் பொதுச்செயலாளர்  தஞ்சை இரா.ஜெயக்குமார் உரையாற்றுகையில்,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த கரோனா பெருந்தொற்று காலத்தில் நேரடியாக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தி தோழர்களை நேரடியாக சந்திப்பதில் பெருமகிழ்ச்சி! இந்த காலகட்டத்தில் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒன்றரை ஆண்டிற்கு மேலாக மிகப்பெரிய அளவில் பிரச்சார பணிகளைமேற்கொண்டார். அது இந்திய அளவில் எதிரொலிக்கின்ற வகையில் அமைந்தது. தொடர்ந்து காணொலி வாயிலாக தினமும் ஒரு கூட்டம் என்கிற வகையில் சொற்பொழிவை நிகழ்த்தி வருகிறார்.

இயக்கத் தோழர்கள் கரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் இயக்க ஏடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு போன்ற ஏடுகளுக்கு சந்தாக்களை சேர்த்து வழங்கியுள்ளனர்.

தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்ற ஆண்டு மிக எழுச்சியோடு கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் சுவரெழுத்துப் பிரச்சாரம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தற்போது வருகிற செப்டம்பர் 17 தந்தை பெரியார் 143 ஆவது பிறந்தநாள் அன்று மோடியின் பிறந்த நாள் என்று பிஜேபி மதவாத கும்பலால் முன்னிறுத்தப்படுகிறது.  அதனை முறியடிக்கின்ற வகையிலே நம்முடைய செயல்பாடு அமைய வேண்டும்.

மதவாதம், ஜாதியவாதம் இவற்றுக்கிடையில் கரோனா கொடுந் தொற்று இருந்தாலும் இவற்றையெல்லாம் தாண்டி நமது இயக்க பிரச்சாரப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக இயக்கத்தின் ஒவ்வொரு அணித் தோழர்களும் தங்களாலான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.

சென்ற வாரம் ஆசிரியர் அவர்கள் தஞ்சைக்கு வருகை புரிந்த போது அனைத்து பொறுப்பாளர்களும் தோழர்களும் வந்து சந்தித்துள்ளீர்கள்.

இந்த ஆண்டு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வினை கரோனா காலத்தில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி தக்க பாதுகாப்புடன் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

தஞ்சையில் தொடங்கிய பெரியாரியல் பயிற்சி வகுப்பு இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி, 19 மண்டலங்களில் நடைபெற்று அதன் பிறகு மகளிருக்கென நான்கு மண்டலங்களாக நடைபெற்று முடிந்திருக்கிறது. வருகிற

10-ஆம் தேதி இந்த பயிற்சி வகுப்பில் முதலாவது இரண்டாவது பரிசினை பெற்றுள்ள மாணவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற இருக்கிறது. அது நமது மாவட்டத்தில் நடைபெறுவதால் அந்த நிகழ்வுக்கான அனைத்து பணிகளையும் நாம்தான் செய்ய வேண்டும்.

அதற்காக தோழர்கள் ஒத்துழைப்பை உழைப்பை வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி கருத்துரையாற்றினார்.

இக்கட்டத்தில் கலந்துகொண்டு கருத்து கூறியவர்கள்:

பூதலூர் ஒன்றிய தலைவர் அள்ளுர் இரா.பாலு, திருவையாறு ஒன்றிய தலைவர் .கண்ணன், அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கி. ஜவகர், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு .இராமலிங்கம், உரத்தநாடு ஒன்றிய செயலாளர் .லெட்சுமணன், பூதலூர் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், அம்மாபேட்டை நகரத் தலைவர் அண்ணாதுரை, தஞ்சை தெற்கு ஒன்றிய அமைப்பாளர் தனபால், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, பெரியார் சமூகக் காப்பு அணி இயக்குநர் தெ.பொய்யாமொழி, மாவட்ட துணைசெயலாளர் .சந்துரு, மாவட்ட இளைஞரணி துணை தலைவர் பா.விஜயக்குமார். மண்டல மகளிரணி செயலளார் கலைச்செல்வி, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் .சங்கர், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கிய அணி செயலாளர் பேராசிரியர் .எழிலரசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில கலைத்துறை செயலாளர் .சித்தார்த்தன், பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் மா.அழகிரிசாமி, மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன், கழகக் காப்பாளர் வெ.ஜெயராமன்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்:

மாநில .. துணை தலைவர் கோபு.பழனிவேல், தஞ்சை தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இர.பாரதி தேவா, மாவட்ட மாணவர் கழக செயலாளர் மானவீரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

இறுதியாக தஞ்சை மாநகர இளைஞரணி துணை தலைவர் .பெரியார் செல்வன்  நன்றியுரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம்:1: இரங்கல் தீர்மானம்

உரத்தநாடு ஒன்றிய செயலாளர் ஒக்கநாடு மேலையூர் .லெட்சுமணன் அவர்களின் சகோதரர் .முருகன், நெல்லுப்பட்டு கழக தோழர் தங்க.இரமேஷ்குமார் அவர்களின் தாயார் இந்திராணி, தலைமைக் கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் அவர்களின் மாமனார் சுப்பையா, திருவையாறு ஒன்றியம் பெரும்புளியூர் ஜெ.கலியபெருமாள் ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம்: 2

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்தநாள் விழாவினை, திராவிடர்களின் தேசிய திருவிழாவாக கொண்டாடுகின்ற வகையில், கழகக் கொடியினை ஏற்றுவது, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி எழுச்சியோடு கொண்டாடுவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம்: 3

தமிழ்நாடு முழுவதும் மிக எழுச்சியோடு நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பங்குபெற்று, முதலாவது, இரண்டாவது இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, 10.08.2021 அன்று மாலை வல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடை பெறும் பரிசளிப்பு விழாவினை மிகச்சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம்: 4

தஞ்சாவூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்களில் தந்தை பெரியார் சிலைக்கு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வருவதால் அனைத்து கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் அதற்கு ஏற்றவாறு பெரியார் சிலையை மறைத்துள்ள கூண்டை நிரந்தரமாக அகற்றிட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தொகுப்பு: நூலகர் நெல்லுப்பட்டு வே.இராஜவேல்,  தஞ்சை

நன்கொடை வழங்கியவர்கள்

ஆகஸ்ட் 10ஆம் தேதி பெரியாரியல் பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கு தஞ்சை வல்லத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழா ஏற்பாட்டிற்கான நன்கொடை வழங்கிய வர்கள்:

1. சி. அமர்சிங், தஞ்சை - ரூ.10,000

2. மு. அய்யனார், தஞ்சை - ரூ.2,000

3. உரத்தநாடு இரா.குணசேகரன் - ரூ.1000

4. குடந்தை க.குருசாமி - ரூ.1000

5. அ.அருணகிரி, உரத்தநாடு - ரூ.1000

6. பேராசிரியர் நம்.சீனிவாசன் -ரூ. 1000

7. இரா.ஜெயகுமார், தஞ்சை -ரூ. 500 

8. அல்லூர் இரா.பாலு - ரூ. 500 

9. ரெ.புகழேந்தி, பூதலூர் - ரூ. 500

10. ச.கண்ணன், திருவையாறு-ரூ. 500

11. து.ஸ்டாலின், திருவையாறு-ரூ.500 

12. அ.தனபால், தஞ்சை - ரூ.500 

13. வெ.நாராயணசாமி, சடையார்கோவில் - ரூ.500

14.பா.நரேந்திரன், தஞ்சை - ரூ.500

15.தே.பொய்யாமொழி, தஞ்சை - ரூ.1000   

16.நெடுவை ந.சங்கர் -ரூ.1000

17. இரா.வெற்றிக்குமார், தஞ்சை - ரூ.500

18. மா.அழகிரிசாமி ப.க -ரூ. 500

19. அதிரடி.க.அன்பழகன்-ரூ. 500

கூடுதல் ரூ. 23,500

தஞ்சை மண்டல பெரியாரியல் பயிற்சி

மாணவர்களுக்கான மூன்றாம் பரிசு

மூன்று நபர்களுக்கு ரூ. 6000

தஞ்சை மண்டலத் தலைவர் மு.அய்யனார்  வழங்கினார்

மூன்று நபர்களுக்கு ரூ 4000 மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி வழங்கினார்.


No comments:

Post a Comment