ஸ்புட்னிக் வி தடுப்பூசி: அடுத்த மாதம் தயாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 5, 2021

ஸ்புட்னிக் வி தடுப்பூசி: அடுத்த மாதம் தயாரிப்பு

அய்தராபாத், ஆக.5    ரஷ்ய கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் தயாரிக் கப்படும் என டாக்டர் ரெட்டிஸ் லேப்ரட்டரி  தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கரோனா 3ஆவது அலை பரவும் வாய்ப்பு இருப்பதால், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில்  ஏற் கெனவே  கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், இவை தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக்வி தடுப்பூசிக் கும் இந்தியாவில் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்க இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேப்ரட்டரி அனுமதி பெற்றுள்ளது.

இந்நிறுவனம் வரும்  செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பு  பணியை தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளது. உள்நாட்டில் உற் பத்தி செய்யப்படும் ஸ்புட்னிக்வி தடுப்பூசி அக்டோபரில் பொது மக்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதுவரை ரஷ்யா வில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டு வருவதாகவும், இது இந்தியா வில் சுமார் 80 நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

நாடு முழு வதும் உள்ள சுமார் 300 மருத்துவ மனைகளில் ஸ்புட்னிக் தடுப்பூசி பயனர்களுக்கு செலுத்தப் பட்டு வருவதாகவும் டாக்டர் ரெட்டிஸ் லேப்ரட்டரி தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment