சென்னை,ஆக.5- அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சரை 4.8.2021 அன்று சந்தித்து வாழ்த்தும் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச் சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களை கூட் டமைப்பின் நிர்வாகிகள் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, பொரு ளாளர் எம்.இளங்கோவன் (அய்அய்டி), செயலாளர்கள் எஸ்.அன்புகுமார் (அய்சி எஃப்), ஏ.ராஜசேகரன் (அய்ஓபி), எஸ்.பிரபாகரன் (ஜிஅய்சி-நியூ இந்தியா), டி. துரைராஜ், எஸ்.சதீஸ் கன்னா (சிபிசிஎல்) மற்றும் சுரேஷ் (எச்விஎஃப், ஆவடி) ஆகியோர் 4.8.2021 அன்று சென் னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சந்தித்து, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சான் றிதழ் வழங்கும்போது, ஊதிய வருமானம், விவசாய வருமானம் குறியீடாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற ஆணையினைப் பிறப்பித்தமைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் மருத்துவ சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்க்கு சட்டப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு முயற் சிகள் செய்து 27விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்திட வழிவகுத்த முதல மைச்சருக்கு நன்றி தெரிவித்திட அமைச்சரிடம் கேட்டுக் கொள் ளப்பட்டது.
இதர பிற்படுத்தப்பட்டோர் தொடர் பான கோரிக்கைகள் அடங்கிய மனுவில் 1. கிரீமிலேயர் முறையை முற்றிலுமாக நீக்குதல், 2. வங்கி வேலைகளில் இதர பிற்படுத்தப்பட்டோர்களுக்கு வேலை மறுப்பு, 3. அப்ரண்டிஸ் சட்டம், 2007 இன் படி அப்ரண்டிஸ் பயிற்சியில் இதர பிற் படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு மறுப்பு. 4. ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் 5. தனியார் துறையின் கூட்டு முயற்சியின் கீழ் துவங்கப்பட உள்ள நாகப்பட்டினம் சுத்திகரிப்பு எண்ணெய் நிலையத்தில் இட ஒதுக்கீடு கொள்கை ஆகியவை குறிப்பிடப் பட்டது.
கோரிக்கைகளை ஒன்றிய அரசின் உடனடி நடவடிக்கைக்கு எடுத்துச் செல்வ தாக அமைச்சர் உறுதியளித்தார்.

No comments:
Post a Comment