மூன்றாவது அலை பரவ வாய்ப்பு நாளொன்றுக்கு ஒரு இலட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

மூன்றாவது அலை பரவ வாய்ப்பு நாளொன்றுக்கு ஒரு இலட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம்

 புதுடில்லி ஆக 4 தினசரி 1லட்சம் பேர் வரை பாதிப்பை ஏற்படுத்தும் கரோனா  தொற்றின் 3ஆவது அலை இந்தியாவில் இந்த மாதம் (ஆகஸ்ட்) பரவும் வாய்ப்பு உள்ளதாக அய்அய்டி ஆராய்ச்சி வல்லுநர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திய கரோனா  தொற்றின் 2ஆவது அலை சற்றே குறைந்து மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ள நிலையில், 3ஆவது அலை பரவத் தொடங்கி உள்ளதாக கூறப்படு கிறது. கேரளாவில் தினசரி 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவது அச் சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் கோவிட் 3ஆவது அலை தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இதில், தினசரி பாதிப்பு 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அய்அய்டி வல்லுநர்கள் எச்சரித் துள்ளனர்.

இதுகுறித்து அறிவித்துள்ள அய்தராபாத் அய்அய்டி ஆய்வா ளர்கள் மதுகுமளி வித்யாசாகர், கான்பூர் அய்அய்டி ஆய்வாளர் மனிந்திரா அகர்வால் ஆகியோர் வெளியிட்டுள்ள ஆய்வறிக் கையில்,  கேரளா,  மகாராட்டிரா மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதை ஆய்வுசெய்யும்போது, கரோனா   3ஆவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படு கின்றன.  அவ்வாறு 3ஆவது அலை இந்த மாதம்  ஏற்பட்டால், அதன் கோரமுகம் அக்டோபரில் தெரிய வரும். அக்டோபர் மாதம் 3ஆவது அலையின் உச்சபட்ச தாக்குதல் இருக்கும் என்றாலும் உயிரிழப்பு அதிக அளவில் இருக் காது என்று தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment