அய்டிஅய் மாணவர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

அய்டிஅய் மாணவர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்

சென்னை,ஆக.7- அய்டிஅய் மாணவர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள்

தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது,‘‘கரோனா ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில், அரசு அய்டிஅய். களை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. இதைத் தொடர்ந்து மாநகர போக்குவரத்து கழகம் மாணவர்களுக்கு இந்தகல்வியாண்டுக்கான புதிய இலவச பயண அட்டை அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அதன்படி, அந்தந்த கல்வி நிறுவனங்கள் மீண்டும் செயல்படும்போது மாணவர்கள் தங்களது அடையாள அட்டை அல்லதுபழைய இலவச பயண அட்டையை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் மூலம் நடத்துநர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.’’ என்றனர்.

மின்தடை புகார்: சென்னையில்

நள்ளிரவில் அமைச்சர் ஆய்வு

மது போதையில் இருந்த ஊழியர் பணியிடை நீக்கம்

சென்னை,ஆக.7- வட சென்னை பகுதியில் மின் தடை புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், அப்பகுதியில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 4.8.2021 அன்று நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மின் சேவை தொடர்பாக புகார் அளிக்க வசதியாக அண்ணாசாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும்மின்னகம்நுகர்வோர் சேவை மய்யத்தை 4.8.2021 அன்று இரவு 11 மணிக்கு மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில்ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களின் புகார் அழைப்புகளை அமைச்சரே கேட்டறிந்தார். அதில்,வட சென்னை பகுதியில் மின்தடை ஏற்பட்ட நிலையில், புகார்அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து வட சென்னையில் உள்ள, கொருக் குப்பேட்டை துணை மின் அலுவலகத்துக்கு நள்ளிரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத மின் வாரிய ஊழியர்கள் செய்வதறியாது விழித்தனர். அவர்களில் ஒருவர் மது போதையில் பணியில் இருப்பதையும் அமைச்சர் அறிந்தார். இதைத்தொடர்ந்து துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.எபினேசருடன் சென்று குறைகளை கேட்டறிந்தார். அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல இடங்களில் மின் மாற்றிகளை மாற்ற வேண்டியுள்ளது. கடந்த ஆட்சியில் முறையாக மாற்றவில்லை. தற்போது முதலமைச்சர்  ஸ்டாலின் அனுமதி பெற்று ரூ.625 கோடியில் 68 ஆயிரம் மின் மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை நிறுவும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டை துணை மின்நிலையத்தில் மது போதையில் பணியில் இருந்த லைன் மேனை பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

No comments:

Post a Comment