நீதிபதிகள் மிரட்டப்படும் சம்பவங்கள் மோசமானவை உச்சநீதிமன்றம் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 8, 2021

நீதிபதிகள் மிரட்டப்படும் சம்பவங்கள் மோசமானவை உச்சநீதிமன்றம் கருத்து

புதுடில்லி, ஆக.8 நீதிபதிகள் மிரட்டப்படும் சம்வபங்கள் மோச மானவை என உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் 6.8.2021 அன்று நடைபெற்றது.

ஜார்கண்ட் மாநில வழக்குரைஞர் ஜெனரல் ராஜீவ் ரஞ்சன் ஆஜராகி, நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அண்டை மாநில குற்றவாளிகளும் ஈடுபட்டிருக்கலாம் என்பதாலும், இது தீவிரமானது என்பதாலும் வழக்கு சி.பி.அய்.க்கு மாற்றப்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட் டுள்ளது என தெரிவித்தார்.

அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, அப்படியென்றால் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.அய். திங்கள்கிழமை ஆஜராகட்டும். நீதிமன்றங்களில் சமூக விரோதிகள் நுழைவதைத் தடுத்து, நீதிபதிகள் சுதந்திரமாக பணியாற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் கோரி கருணாகர் மாலிக் தாக்கல் செய்த வழக்கில் ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை.

அந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வகையில் பதில்மனுவை ஒன்றிய அரசும், பதில் மனு தாக்கல் செய்யாத மாநில அரசுகளும் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்டு 17ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கி றோம் என உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி ரமணா, சமூகவிரோத கும்பல் தலைவர்கள், முக்கிய பிரமு கர்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் சில இடங் களில் வாட்ஸ்அப்பில் தகவல்களை அனுப்பி மனரீதியாக அச்சுறுத்தப் படுகின்றனர். நீதிபதிகள் மிரட் டப்படும் சம்பவங்கள் மோசமா னவை.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டும் சி.பி.அய். எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விடயத்தில் உளவுத்துறையும், சி.பி.அய்.யும் நீதித்துறைக்கு உதவுவ தில்லை. ஜார்கண்ட் மாநிலத்தில் இளம் நீதிபதி கொல்லப்பட்ட சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நிலக்கரி கடத்தல் மாபியாக்கள் உள்ள பகுதியில் வசிக்கும் நீதிபதி களுக்கும், அவர்களின் குடியிருப்பு காலனிக்கும் பாதுகாப்பு அளிக்கப் பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment