சென்னை, ஆக.8 மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஆண்டு இறுதிக்குள் ஒரு கோடி பயனாளிகளை கண்டறிந்து மருத்துவ சேவைகள் வழங் கப்படும் என அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பொதுநல மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை அரங்கத் திற்கு ஹெபாபில்ட்டர் மருத்துவ உபகரணம் வாங்கப் பட்ட தன் ஆணை ஒப்படைக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமது ஒரு மாத ஊதியத்தை இந்த மருத்துவமனைக்கு வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
68 ஆண்டுகளுக்கு முன்னால் சிறிய இடத்தில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை தற்போது, 150 படுக்கைகளுடன் கூடிய அனைத்து நவீன வசதிகளுடனும், அனைத்து மருத்துவ கட்டமைப்புகளுடன் கூடிய மருத்துவமனையாக மாறி யுள்ளது. இந்த மருத்துவமனையின் மேம்பாட்டுக்கு நன்கொடைகளும் வரவேற்கப்படுகிறது.
அந்தவகையில் நான் என் னுடைய ஒரு மாத ஊதியத்தை இந்த மருத்துவமனைக்கு நன்கொடையாக அளிக்கிறேன்.
மேலும் தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணா நிதியும் தன்னு டைய ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு என்ன மாதிரி யான பரிசோதனைகள் செய்யப் படுகிறது என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.
இந்தியாவி லேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் தினமும் 1 லட்சம் அளவில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
அந்தவகையில் தமிழ்நாட்டில் கரோனா இன்னும் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.
தமிழ்நாட்டில் தடுப்பூசி கையி ருப்பை பொறுத்த வரை 11 லட்சம் அளவிற்கு உள்ளது. 2 அல்லது 3 நாட்களுக்கு இவை பொதுமக்க ளுக்கு செலுத்தப்படும்.
மேலும் தமிழ்நாட்டின் தேவை 12 கோடி தடுப்பூசியாக இருக்கிறது. அதில் 2 கோடி அளவிற்கு கிடைத்துள்ள நிலையில், இன்னும் 10 கோடி தடுப்பூசிகள் வேண்டும்.
அதேபோல் இந்த மாதம் 79 லட்சம் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்க உள்ளது. தமிழ்நாடு அரசின் சிறப் பான செயல்பாட்டால், ஒன்றிய அரசு கூடுதலாக தடுப்பூசிகளை கடந்த மாதம் வழங்கியது.
அதே போல் இந்த மாதமும் வழங்கினால், இந்த மாதம் இறுதிக் குள் 3 கோடி அளவிற்கு தமிழ் நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற எண்ணிக்கையை அடைய முடியும். தமிழ்நாட்டில் 60 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதே மக் களை தேடி மருத்துவம் திட்டத்தின் நோக்கம். டிசம்பர் இறுதிக்குள் ஒரு கோடி பயனாளிகளை கண்டறிந்து, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்க்கான மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்படும். தற்போது 20 லட்சம் பேர் பயன் பெற தொடங்கி இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment