திண்டிவனம் கே.இராமமூர்த்தி மறைவு கழகத் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 8, 2021

திண்டிவனம் கே.இராமமூர்த்தி மறைவு கழகத் தலைவர் இரங்கல்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்மேனாள் தலைவரும், சமூக நீதிப் போராளியுமான நண்பர் திண்டிவனம் கே.இராமமூர்த்தி (வயது 84) அவர்கள் இன்று (8.8.2021) காலை காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.

அரசியலில் சிற்சில நேரங்களில் மாறுபட்ட நிலை எடுப்பவராக அவர் இருந்தபோதிலும், சமூக நீதி என்று வரும்போது தவறாது குரல் கொடுத்து களத்தில் நிற்கத் தவறாதவர்.

எம்.ஜி.ஆர். அரசு 1978-1979இல் பிற்படுத்தப்பட் டோருக்கு 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையைப் புகுத்தியபோது, தி.., தி.மு., இந்தியக் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் அவரும் பல மேடைகளில் கலந்து கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டவர்.

சிறந்த பண்பாளர். அவரது மறைவால் மிகப் பெரிய இழப்புக்கு ஆளாகியுள்ள அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

8.8.2021  

No comments:

Post a Comment