கரோனா பாதிப்பு: தங்க நகையை வைத்து கடன் வாங்குவோர் அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

கரோனா பாதிப்பு: தங்க நகையை வைத்து கடன் வாங்குவோர் அதிகரிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி கவலை

புதுடில்லி, ஆக.4 கரோனா பாதிப் பால் தங்க நகையை வைத்து கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதி கரித்து வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில்  கரோனா தாக்கத் தால் மக்கள் அன்றாடா செலவுகள் மற்றும், மருத்துவ சிகிச்சைக்காக  தங்களிடம் இருக்கும் நகைகளை அடமானம் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்

இந்தியா முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, மூன்றாவது அலைக்கு அரசுகள் தயாராகி வரும் நிலையில், கரோனா  பேரிடரால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசுகள் வழங்கும் ரேசன் பொருட்களும் தேவையை நிறை வேற்றக் கூடிய அளவில் இல்லை. இதனால் குடும்பச் செலவுகளுக்கே சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஓராண் டாக தங்க நகைக்கடன் , வாகனக் கடன், வீட்டுக்கடன், தனி நபர் கடன், வேளாண் கடன் போன்ற வற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

தங்க நகைக்கடன் என்பது 34.9 சதவீதத்தில் இருந்து 81.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனி நபர் கடனும் 10.8 சதவீதத்தில் இருந்து 16.6 சத வீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, தனி நபர் கடனானது 27 லட்சத்து 86 ஆயிரத்து 519 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், வீட்டுக்கடன் வாங்குவதும் 9.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

தங்க நகைக்கு மட்டுமே ரூ.62,221 கோடி கடன் தரப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி  தெரிவித்துள்ளது. அதேநேரம், கல்விக் கடன் பெறுவது குறைந்துள்ளது.

கடந்த ஓராண்டு காலத்தில் ரூ.62,720 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந் தாண்டு ரூ.63,805 கோடி கல்விக்கடன் வழங் கப்பட்டிருந்தது.

மேலும், கிரிடிட் கார்டு  மூலம் கடன் பெறுவது, வங்கி முதலீட்டுப் பத்திரங்களை அடமானமாக வைத்து கடன்பெறுவது போன்ற வையும்அதிகரித்துள்ளதாக ஆர்.பி.அய் தெரிவித்துள்ளது.

அதிலும், முதலீட்டுப் பத்தி ரங்கள் மூலமாக ரூ. 65,891 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி  பட்டியலிட்டுள்ளது.

No comments:

Post a Comment