பெரம்பலூர், ஆக.4 பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய கழக தலைவர் து.பெரியசாமி (வயது 97) அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 2.8. 2021 அன்று காலை 10.30 மணி அளவில் கூத்தூரில் மண்டல தி.க.தலைவர் பொறியாளர் இரா கோவிந்தராஜன் தலைமையில் மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் சீ. தங்கராசு, அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, பெரம்பலூர் நகர தலைவர் அக்ரி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மணிமேகலை வரவேற்புரையாற்றினார். படத்தினை திறந்து வைத்து கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் நினைவுரை ஆற்றினார்.
அவர் தமது உரையில், மறைந்த பெரியார் பெருந்தொண்டரின் அருமை பெருமைகளை ஆளுமையை, இயக்கத்தின் மீது, கழகத் தலைமையின் மீது அவர் கொண்ட உறுதிப்பாட்டை, பிள்ளைகளைப் பேணிய விதத்தை போற்றிப் பேசினார்.
மறைந்த அவரின் நினைவு தொகுப்பினை மேனாள் ஆலத்தூர் ஒன்றிய தலைவர் பெரியசாமி வெளியிட்டார் தோழர்கள் பெற்றுக்கொண்டனர். திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராசு, கோட்டப் பொறியாளர் ராமச்சந்திரன், கோட்ட பொறியாளர் வேங்கடாசலம், புலவர் முத்துசாமி, புலவர் அறிவழகன், ஆசிரியர் மணிமாறன், மாவட்ட திட்ட அமைப்பாளர்கள் துரைசாமி, ரத்தின ராமச்சந்திரன், மாவட்டப.க. தலைவர் தங்க சிவமூர்த்தி, வழக்குரைஞர் பகுத்தறிவாளன், மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் தனபால், பொதுக்குழு உறுப்பினர் அரங்கராசன், மண்டல இளை ஞரணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சேகர், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சிவக்கொழுந்து, செயலாளர் இளவரசன், அமைப்பாளர் விஜயேந்திரன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் வேலாயுதம், அரியலூர் ஒன்றிய தலைவர் மருதமுத்து, அரியலூர் ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், பெரம்பலூர் மாவட்ட ப.க.பொறுப்பாளர் நடராசன், மறைந்த பெரியசாமியின் மகனும் உதவி கோட்ட பொறியாளர் நடராஜன், அரியலூர் கோபால் மற்றும் தோழர்கள் நினைவுரை ஆற்றினர்.இரு நிமிடம் அமைதிகாத்து மரியாதை செலுத்தப்பட்டது.
தலைமை ஆசிரியை அமிர்தம் நன்றி கூறினார்.


No comments:
Post a Comment